சிம்புவிற்கு விஜய்யின் ‘யோகன்’ போன்ற ஒரு படம்.! ரகசியத்தை சொன்ன ஹரிஷ் கல்யாண்.!

0
842
Simbu-Harish-kalyan
- Advertisement -

இளையதளபதி விஜய் இதுவரை தமிழில் பல வெற்றி இயக்குனர்களின் படங்களில் நடித்துள்ளார். ஆனால், இதுவரை கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்தது இல்லை. இவர்கள் இருவர் கூட்டணியில் வெளியாக இருந்த “யோகன் அத்யாயம் ஒன்று” என்ற படமும் கை விடபட்டது.

-விளம்பரம்-

சமீபத்தில் இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய கௌதம் மேனன் “நடிகர் விஜய் முழு கதையை கேட்ட பின்னரே படங்களில் நடிக்க ஒப்புக்கொள்வார். ஆனால், இந்த படத்தின் ஒன் லைன் கதையுடன் படத்தின் 75 சதவீத கதையை மட்டுமே நான் விஜய்யுடன் கூறினேன். அதனை கேட்ட விஜய் இந்த படத்தின் முழு கதையை தயார் செய்து பின்னர் சொல்லுங்கள் என்று கூறியிருந்தார்.ஆனால், நான் தான் தாமத படுத்திவிட்டேன் என்று கூறியிருந்தார்.

இதையும் படியுங்க : ட்ராப் செய்யப்பட்ட படத்தில் நடிக்கிறாரா விஜய்..! பிரபல இயக்குனர் விளக்கம் 

- Advertisement -

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகரும் சிம்புவின் தீவிர ரசிகரான ஹரிஷ் கல்யாணிடம் சிம்புவை வைத்து படம் இயக்குவீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கண்டிப்பாக எடுப்பேன். சொல்லப்போனால் ஒரு முறை நானும் அவரும் இது குறித்து பேசிக் கொண்டோம். அப்போது நான் அவரிடம் நீங்கள் ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைலில் ஒரு த்ரில்லர் படம் நடிக்க வேண்டும் என்று கூறி இருந்தேன். ஒருவேளை அவரை வைத்து படம் இயக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நான் கண்டிப்பாக திரில்லர் படத்தைதான் எடுப்பேன்.

அவருடைய கெட்டப் மற்றும் ஸ்டைலை முழுவதும் மாற்றி விடுவேன். சொல்லப்போனால் தளபதி ‘யோகன்’ போஸ்டரில் இருப்பது போல அவரை நான் மாற்றி விடுவேன் என்று கூறியுள்ளார். மேலும், இவரது நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தை பற்றி பேசுகையில், இந்த படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று கண்டிப்பாக இந்த படத்தை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். பியார் பிரேமா காதல் படத்திற்கு அவர்கள் கொடுத்த அன்பைப் போலவே இந்தப் படத்திற்கும் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார் ஹரிஷ் கல்யாண்.

-விளம்பரம்-
Advertisement