சம்பளத்தை உயர்த்திய யோகி பாபு.! ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா ?

0
589
Yogi-babu

தமிழில் எண்ணெற்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்து வருபவர் காமெடி நடிகர் யோகி பாபு. இவரது உண்மையான ப்ளஸ்ஸே இவரது உருவ அமைப்பு என்றே கூறலாம். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவரது தோற்றம் பிடித்து போக இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கூடி வருகிறது.

Image result for yogi babu

தற்போது வெளியாகும் பெரும்பாலான ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடித்துவருகிறார். விஜய் 63 தர்பார் என்று யோகி பாபுவின் கைவசம் தற்போது 19 படங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தர்மபிரபு உள்ளிட்ட சில படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் வருகிறார்.

இதையும் படியுங்க : அஜித் சொல்லித்தான் கிளைமாக்சை மாற்றினேன்.! ஆனால், அந்த படம் படு ஹிட்.

- Advertisement -

யோகி பாபு நடிப்பதற்கு இதுநாள் வரை நாள் ஒன்றுக்கு ரூ 2 லட்சம் சம்பளமாக வாங்கி வந்தார். சமீபத்தில் அதனை ரூ 3 லட்சமாக உயர்த்தியிருந்தார். தற்போது தனது கிராக்கிய அறிந்த யோகி பாபு மீண்டும் தனது சம்பளத்தையும் உயர்த்தி விட்டார்.

இதுவரை ஒரு படத்துக்கு ஒரு நாளைக்கு 3 லட்சம் சம்பள தொகை என்று வாங்கியதை நிறுத்திவிட்டு ஒரு நாளைக்கு ரூ.5 லட்சம் சம்பளம் நிர்ணயித்து உள்ளாராம். நிறைய தயாரிப்பாளர்கள் மும்பையில் தர்பார் படப்பிடிப்பில் இருக்கும் யோகிபாபுவிடம் கால்ஷீட் கேட்டு பணப்பெட்டியுடன் படையெடுத்து உள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement