தள்ளிப்போகும் திருமண வரவேற்பை பற்றியும் கவலை படாமல் தொடர்ந்து உதவும் யோகி பாபு. வீடியோ இதோ.

0
534

இந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் பிரதமர் மோடி அவர்கள் ஊரடங்கு உத்தரவை மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளார். இதுவரை இந்தியாவில் கொரோனாவினால் 24056 பேர் பாதிக்கப்பட்டும், 775 பேர் பலியாகியும் உள்ளனர். அதே போல் தமிழ்நாட்டில் தற்போது கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1683 ஆக உயர்ந்து உள்ளது. இப்படி கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டு செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. ஊரடங்கு உத்தரவினால் போக்குவரத்து, கடைகள், மக்களின் பொழுதுபோக்கு இடங்கள், மது கடைகள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் உணவு தட்டுப்பாடு சூழல் ஏற்பட்டு உள்ளது. கொரோனவினால் ஏழை மக்கள், ஆதரவற்றோர், கூலி வேலை செய்பவர்கள் என பலர் தங்களின் வாழ்வாதரத்திற்காக கஷ்டப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு சினிமா பிரபலங்களும், சமூக ஆர்வலர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். விஜய்,அஜித் உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களால் முடிந்த பண உதவிகளை செய்து வருகிறார்.

- Advertisement -

அந்த வகையில் நடிகர் யோகி பாபு அவர்கள் கொரோனாவால் அவதியுற்று வருபவர்களுக்கு உதவி செய்து வருகிறார். அதோடு யோகி பாபு ரசிகர்கள் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வும், மாஸ்க், சானிடைசர் உட்பட பல உதவிகளை செய்து உள்ளார்கள். இந்நிலையில் நடிகர் யோகி பாபு அவர்கள் இதுவரை யாரும் செய்திராத உதவியை டிராபிக் போலீஸ்க்கு செய்து அசத்தி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு வாழ்த்து மழை குவிந்த வண்ணம் உள்ளன.

போலீசார், மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள் என அனைவரும் தங்களுடைய உயிரை பணயம் வைத்து இரவு, பகல் என்று பாராமல் மக்கள் உயிரை காப்பாற்ற போராடி வருகிறார்கள். குறிப்பாக போலீசார் வெயில் என்று கூட பார்க்காமல் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு உணவு போன்ற பல்வேறு உதவிகள் கிடைத்தாலும் கொரோனா வைரஸை முழுமையாக கட்டுப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்ட N95 மாஸ்க் கொடுக்கப் படுகிறதா?? என்றால் அது சந்தேகம் தான்.

-விளம்பரம்-

இந்நிலையில் நடிகர் யோகி பாபு 24 மணி நேரமும் தங்கள் பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல் உழைத்துக் கொண்டிருக்கும் போலீசாருக்கு உதவும் வகையில் அவர்களுக்கு N95 மாஸ்க் மற்றும் எனெர்ஜி பானங்களை வாங்கி கொடுத்துள்ளார். சென்னை ட்ராபிக் போலீசார் மற்றும் சட்ட ஒழுங்கு போலிஸாருக்கு இதை வழங்கியுள்ளார். நடிகர் யோகிபாபு செய்த உதவிக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தற்போது இந்த நியூஸ் சோசியல் மீடியவில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் நடிகை யோகி பாபு அவர்கள் நாடக நடிகர்கள் மற்றும் தினசரி நடிகர்களுக்கு 1,250 கிலோ அரிசி வழங்கியுள்ளார். இதனைச் சிலருக்கு தன் கையாலேயே கொடுத்துள்ளார். மேலும், இப்ப தான் நடிகர் யோகி பாபுவுக்கு திருமணமானது. இருந்தாலும் இவர் அதைப்பற்றி கவலைப்படாமல் வெளியே வந்து மக்களுக்கு உதவி செய்து வருகிறார். திருமண வரவேற்பு தள்ளிப் போனாலும் கூட அது குறித்து ஒரு கவலை இல்லாமல் தன்னால் முடிந்த உதவிகளை மக்களுக்கு இறங்கி செய்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் வடிவேலு மற்றும் சந்தானத்திற்கு பிறகு காமெடி நடிகர்களில் அதிக புகழையும், பிரபலத்தையும் குறுகிய காலத்திலேயே சம்பாதித்தவர் காமெடி நடிகர் யோகி பாபு. இவர் தற்போது முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய காமெடி நடிகராக நடித்து வருகிறார். ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் கலக்கி கொண்டு வருகிறார்.

Advertisement