இளையதளபதி விஜய் இதுவரை தமிழில் பல வெற்றி இயக்குனர்களின் படங்களில் நடித்துள்ளார். ஆனால், இதுவரை கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்தது இல்லை. இவர்கள் இருவர் கூட்டணியில் வெளியாக இருந்த “யோகன் அத்யாயம் ஒன்று” என்ற படமும் கை விடபட்டது.
இந்த படத்தின் சில தகவல்கள் சில ஆண்டுகளுக்கு முன்னரே வெளியான, மேலும், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் வெளியான நிலையில் இந்த படம் திடீர் என்று கைவிடப்பட்டது. சமீபத்தில் இந்த படம் கைவிடபட்டது குறித்து பேசிய இயக்குனர் கௌதம் மேனன் இந்த படத்தின் முழு கதையை விஜய்யிடம் தாம் கூறவில்லை என்று தெரிவித்துளளார்.
இதையும் பாருங்க : நடிகை ரம்யாகிருஷ்ணனின் மகனா இது.! என்ன இப்படி வளர்ந்துட்டார்.! நீங்களே பாருங்க.!
சமீபத்தில் இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய கௌதம் மேனன் “நடிகர் விஜய் முழு கதையை கேட்ட பின்னரே படங்களில் நடிக்க ஒப்புக்கொள்வார். ஆனால், இந்த படத்தின் ஒன் லைன் கதையுடன் படத்தின் 75 சதவீத கதையை மட்டுமே நான் விஜய்யுடன் கூறினேன். அதனை கேட்ட விஜய் இந்த படத்தின் முழு கதையை தயார் செய்து பின்னர் சொல்லுங்கள் என்று கூறியிருந்தார்.ஆனால், நான் தான் தாமத படுத்திவிட்டேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் இந்த படம் மீண்டும் துவங்க உள்ளது. ஆனால், இதில் விஜய் கதாநாயகன் இல்லையாம். இந்த படத்தை ஐசாரி கணேஷ் தயாரிக்க உள்ளாராம். நடிகரான இவர், போகன், ஜூங்கா, தேவி 2 போன்ற படங்களை தயாரித்துள்ளார். மேலும், இவரது நெருங்கிய உறவினர் ஒருவர் தான் யோகன் படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறாராம்.