விசுவாசம் படத்தில் இருந்து விலகிவிட்டாரா யுவன் ? உண்மை என்ன?

0
1181

அஜித் சிவா கூட்டணியில் கடந்த ஆண்டு வெளிவந்த விவேகம் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனாலும் தல அஜித் தன்னுடைய அடுத்த படத்தின் இயக்குனராக சிவாவையே தேர்ந்தெடுத்தார். விசுவாசம் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா தான் இசை அமைக்க உள்ளார், இந்த படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என இந்த படம் குறித்த சில ருசிகர தகவல்கள் வெளியானது.
visuvasam

மங்காத்தா படத்தில் யுவன் இசையமைத்த பாடல்கள் ஹிட் அடித்த நிலையில் விசுவாசம் படத்திலும் யுவன் நிச்சயம் துள்ளலான மெட்டுக்களை அமைத்து அனைவரையும் கவருவார் என தல ரசிகர்கள் ஆவலாக இருந்தனர்.

இதையும் படிக்கலாமே:
மோகன்ராஜா இயக்கத்தில் சிம்பு, மாஸ் கூட்டணி ரெடி

இந்த நிலையில் விசுவாசம் படத்தில் இருந்து யுவன் விலகிவிட்டார் என செய்திகள் வெளிவர ஆரமித்துள்ளன. ஆனாலும் இது குறித்து அதிகார பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாக வில்லை. படக்குழுவினர் இதுகுறித்து தெரிவித்தால் மட்டுமே உண்மை நிலையை அறியமுடியும்.