சன் டிவியில் சஞ்சீவ் நடிக்கும் ‘கயல் சீரியல்’ – ஜோடியாக ஜீ தமிழ் சீரியல் நடிகை (அப்போ அந்த சீரியலுக்கு எண்டு கார்டா )

0
5764
sanjeev
- Advertisement -

பிரபல சீரியல் நடிகரான சஞ்சீவ் புதிய தொடரில் கமிட் ஆகி இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று விடுகிறது அதிலும் ராஜா ராணி, சின்னத் தம்பி, நாம் இருவர் நமக்கிருவார், ஆயுத எழுத்து, மௌன ராகம் என்று சினிமா பாணியில் டைட்டில்கள் வைத்து பல்வேறு தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் காற்றின் மொழி என்ற தொடர் ஒளிபரப்பாகி வந்தது. இந்த தொடரில் ராஜா ராணி புகழ் சஞ்சீவ் கதாநாயகனாக நடித்து வந்தார்.

This image has an empty alt attribute; its file name is 1-111-1024x942.jpg

மேலும் இந்தத் தொடர் மூலம் தமிழ் சீரியலுக்கு அறிமுகமாகி இருந்தார் பிரியங்கா ஜெயின்.இந்த தொடரில் அமெரிக்க ரிட்டர்ன் ஆக அவரும் சஞ்சீவ் இருக்கும் கிராமத்து சூழலில் வாழும் கதாநாயகிக்கும் ஏற்படும் காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு இருந்தது. வெற்றிகரமாக ஒரு வருடத்திற்கு மேல் ஓடிய இந்த தொடர் மொத்தம் 331 எபிசோடுகள் ஓடிய நிலையில் நிறுத்தப்பட்டது.

இதையும் பாருங்க : 60 வயது நடிகருக்கு 20 வயது நடிகை ஜோடியா ? நாரப்பாவை நாறடித்த ரசிகர். சித்தார்த்தை உதாரணம் காட்டியதால் கடுப்பாகி அவர் கொடுத்த பதில்

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நடிகர் சஞ்சீவ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 7.30 PM பிரைம் டைமில் சன் தொலைக்காட்சியில் புதிய சீரியலில் நடிக்க இருப்பதாக தனது அடுத்த சீரியலின் அறிவிப்பை அறிவித்து இருந்தார்.இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இந்த சீரியலின் பூஜை துவங்கி இருக்கிறது. அந்த புகைப்படத்தை சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விஷன் டைம்ஸ் நிறுவனம் சார்பில் தயாராக இருக்கும் இந்த தொடருக்கு ‘கயல்’ என்ற சினிமா பட டைட்டிலையே வைத்துள்ளனர். ஏற்கனவே சஞ்சீவ் நடித்த ராஜா ராணி , காற்றின் மொழி ஆகிய இரண்டு சீரியல் டைட்டிலும் சினிமா பட டைட்டில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியலில் சஞ்சீவ்க்கு ஜோடியாக யாரடி நீ மோகினி சைத்ரா நடிக்க இருக்கிறார். இதனால் யாரடி நீ மோகினி சீரியல் விரைவில் முடியபோகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement