‘ஆட சொன்னா என்ன பண்றீங்க’ – பெரும் விமர்சனத்திற்கு உள்ளான ஜீ தமிழ் நடன நிகழ்ச்சி வீடியோ.

0
386
dance
- Advertisement -

ஜீ தமிழ் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை நெட்டிசன்கள் விமர்சித்து வரும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பொதுவாகவே சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும், சமீபகாலமாக சீரியல்களை விட ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு அதிக வரவேற்பு பெற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள்.

-விளம்பரம்-

குறிப்பாக, டான்ஸ் நிகழ்ச்சிகள் பல சேனல்களில் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி டான்ஸ் ஜோடி டான்ஸ். இந்த நிகழ்ச்சி சாமானியர்களை சாதனையாளர்களாக மாற்றும் நிகழ்ச்சி என்று சொல்லலாம். இந்த நிகழ்ச்சியை கிகி மற்றும் மிர்ச்சி விஜய் தொகுத்து வழங்குகிறார்.

- Advertisement -

டான்ஸ் ஜோடி டான்ஸ்:

மேலும், இந்த நிகழ்ச்சியில் சினேகா, பாபா பாஸ்கர் மாஸ்டர், சங்கீதா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகிறார்கள். ஏற்கனவே, இந்த நிகழ்ச்சி ஜீ தமிழில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. சமீபத்தில் தான் இந்த நிகழ்ச்சியின் புதிய சீசன் தொடங்கி இருக்கிறது. இதில் 12 போட்டியாளர்கள் தேர்வு செய்திருக்கிறார்கள்.

நிகழ்ச்சியின் போட்டியாளர்கள்:

இதில் பலர் புதுமுகம் என்றே சொல்லலாம். இதில் இலங்கை பெண் ஒருவர் இந்த நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். இவரை இந்தியர் ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார். பின் கைக்குழந்தையுடன் இவரை தனியாக விட்டு சென்று விட்டார். அந்த பெண் தனியாக தன்னுடைய வாழ்க்கையில் போராடிக் கொண்டிருக்கின்றார். நடனத்தில் சாதித்து காட்ட வேண்டும் என்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

வைரலாகும் டான்ஸ் வீடியோ:

இப்படி பல போட்டியாளர்கள் நடனத்தின் மூலம் சாதிக்க போராடி கொண்டு இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்த சர்ச்சை தான் தற்போது தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. அதாவது, இந்த நிகழ்ச்சியில் கிளாமரான பாட்டுக்கு இருவர் நடனம் ஆடி இருக்கிறார்கள்.

விமர்சிக்கும் நெட்டிசன்கள்:

இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆனதை தொடர்ந்து பலரும் இந்த நிகழ்ச்சி குறித்தும், இவர்களுடைய நடனம் குறித்தும் விமர்சித்து பேசி இருக்கிறார்கள். சிலர் இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருக்கிறார்கள். அதிலும் சிலர், குழந்தைகள் இந்த நடன நிகழ்ச்சியை பார்த்தால் என்ன ஆவது? இப்படி எல்லாம் நடனம் ஆடுவதா? இதுவே குழந்தைகளை தவறான வழிக்கு கொண்டு செல்வது என்றெல்லாம் பயங்கரமாக விமர்சித்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement