42 வயதில் இளம் நடிகையை ரகசிய திருமணம் செய்தாரா தேவி ஸ்ரீ பிரசாத் – நடிகை அளித்த விளக்கம்.

0
134
poojitha
- Advertisement -

பிரபல தெலுங்கு நடிகையை இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ரகசியமாக திருமணம் செய்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான இசையமைப்பாளராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தேவி ஸ்ரீ பிரசாத். இவர் ஆந்திரா மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் தெலுங்கு மொழியில் மட்டுமில்லாமல் தமிழ் உட்பட பிற மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் இசையமைப்பாளர் மட்டும் இல்லாமல் பாடகர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவருடைய இசையில் வெளிவந்த பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. சொல்லப்போனால் இன்றைய இளைஞர்களின் இசை ஜாம்பவானாக தேவி ஸ்ரீ பிரசாத் திகழ்ந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த தீ வாரியார் என்ற படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைத்து இருந்தார்.

- Advertisement -

தேவி ஸ்ரீ பிரசாத் திரைப்பயணம்:

இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து இருந்தது. இதனை தொடர்ந்து நாகேஷ் குகுனூர் இயக்கத்தில் உருவாகி வரும் குட் லக் சகி என்ற படத்தில் இவர் இசையமைத்திருக்கிறார். பின் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகும் ‘சூர்யா 42’ என்ற படத்திற்கு இவர் தான் இசையமைத்து வருகிறார். தற்போது சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் பிரின்ஸ். இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கும் படங்கள்:

இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் உக்கரை நாட்டை சேர்ந்த மாடல் அழகி Maria Ryaboshapka கதாநாயகியாக நடித்திருக்கிறார். தற்போது இந்த திரைப்படம் வெளியாக தயாராக இருக்கிறது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில் தேவி ஸ்ரீ பிரசாந்துக்கும் பிரபல நடிகைக்கும் ரகசிய திருமணம் நடந்து முடிந்தது என்ற தகவல் சோசியல் மீடியாவில் சர்ச்சை கிளப்பி வருகிறது.

-விளம்பரம்-

நடிகை பூஜிதா-தேவி ஸ்ரீ பிரசாத் திருமணம்:

தற்போது தேவி ஸ்ரீ பிரசாத்க்கு 42 வயது ஆகிறது. இருந்தும் இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆகவே, இவர் பிரபல தெலுங்கு நடிகை பூஜிதா என்பவரை ரகசியமாக திருமணம் செய்திருப்பதாக சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது. இதனை அடுத்து நடிகை பூஜிதா அவர்கள் இதற்கு விளக்கம் கொடுத்து இருக்கிறார். அதில் அவர், எனக்கும் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கும் ரகசிய திருமணம் நடந்ததாக வரும் தகவல்கள் எதுவுமே உண்மை இல்லை.

விளக்கம் கொடுத்த நடிகை பூஜிதா:

இந்த மாதிரி பொய்யான தகவல்களை எங்கிருந்து தான் உருவாக்குகிறார்கள் என்று தெரியவில்லை. அவருடன் நான் டேட்டிங் கூட செய்யவில்லை. தற்போது வரை நான் சிங்கிளாக தான் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இப்படி நடிகை பூஜிதா கொடுத்திருக்கும் விளக்கம் மூலம் இவர்களுடைய திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

Advertisement