விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக பிரபலமாக ஒட்டிக்கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை , சீனியர், ஜூனியர் என்று மாறி மாறி ஒளிபரப்பி வருகிறது விஜய் டிவி. அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த நிகழ்ச்சியின் 8 வது சீசன் படு கோலாகலமாக துவங்கியது.பொதுவாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து யாராவது திறமையான பாடகர்கள் வெளியேறினால் சர்ச்சைகள் ஏற்படுவது வழக்கமான ஒரு விஷயம் தான். அதேபோல இதுவரை நடந்து முடிந்த பல்வேறு சூப்பர் சிங்கர் சீசன்களின் டைட்டில்களை தகுதியானவர்களுக்கு கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து தான் வருகிறது.
இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரீதர் சேனா நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.ஸ்ரீதர் சேனா இறுதிச் சுற்றுவரை வருவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இது மிகப் பெரிய ஏமாற்றமாக தான் அமைந்திருந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் இருந்து ஐயனார் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் பாருங்க : சுருக்கு போட்ட லோ நெக் ஜாக்கெட் – ஓனம் பண்டிகையில் படு மோசமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை.
மிகவும் அருமையாகபாடும் போட்டியாளர்களில் ஒருவரான ஐயனாரின் வெளியேற்றம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்த்தியை ஏற்படுத்தியுளது. ஏற்கனவே ஸ்ரீதர் வெளியே ஏறியதில் இருந்தே இந்த நிகழ்ச்சியின் நடுவர்கள் ரசிகர்கள் பலரும் திட்டி தீர்த்து வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் தான் இனி வரும் சூப்பர் சிங்கர் சீசன்களில் தான் பங்கேற்க மாட்டேன் என்று இந்த நிகழ்ச்சியின் ஒரு நடுவரான பென்னி தயாள் கூறி இருந்தார்.
அப்போது பென்னி தயாளுக்கு ஆதரவாக பதிவிட்ட குரு, இதுபோன்ற குலைக்கும் நாய்களைப் பற்றி எல்லாம் கவலைப் படாதீர்கள். அவர்கள் குலைத்துக் கொண்டே இருக்கட்டும், அது மட்டும் தான் அவர்களால் சரியாக செய்ய முடியும். நாங்கள் எப்போதும் உங்களை நேசிக்கின்றோம்என்று பதிவிட்டு இருந்தார். ஆனால், இவரே இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.