கலைஞர் 100 விழாவில் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து பேசிய சூர்யா – திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்

0
496
Surya
- Advertisement -

அனைவரும் எதிர்பார்த்த கலைஞரின் நூற்றாண்டு விழா நேற்று முந்தய தினம் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டிருக்கிறது. கலைஞர் கருணாநிதி என்ற பெயரை கேட்காத நபர்கள் தமிழ் நாட்டில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அரசியலிலும் சரி சினிமாத்துறையிலும் சரி அவர் ஆற்றிய பங்கு மிகப்பெரியது. மேலும், நேற்று முந்தைய தினம் கலைஞரின் நூற்றாண்டு விழா சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த விழாவை மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நினைவாக திமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

இந்த விழா கடந்த மாதமே நடைபெறுவதாக தான் இருந்தது. ஆனால், மிக்ஸாம் புயல் மற்றும் கனமழையால் தான் இந்த நிகழ்வு தள்ளி வைக்கப்பட்டது. தமிழ் சினிமா வளர்ச்சியில் கருணாநிதியின் பங்களிப்பை போற்றும் விதமாக இந்த விழாவை திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கொண்டாடுகிறார்கள். மேலும், இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டிருக்கிறார். இவருடன் இந்த விழாவில் ரஜினி, கமல், சூர்யா, தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன், இசைஞானி இளையராஜா உட்பட திரை பிரபலங்கள் பலர் பங்கேற்று இருக்கின்றார்கள்.

- Advertisement -

கலைஞரின் நூற்றாண்டு விழா:

இந்நிலையில் விழாவில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா, சமூகத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்ற ட்ரெண்டை உருவாக்கியது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தான். அரசியலில் அவர் பல மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமை என்ற பல மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார். இருந்தாலும் அவர் சினிமாவை ஒருபோதும் கைவிட்டதில்லை.

விழாவில் சூர்யா சொன்னது:

அதனால் தான் அவரை மரியாதையாக கலைஞர் என்று அழைக்கிறோம். அதோடு பராசக்தி படத்தில் கை ரிக்ஷா இழுத்து வருபவரை பார்த்து சிவாஜி வருத்தப்பட்டு பேசுவார். அப்போது காவலர் ஒருவர், நீ வேணும்னா ஆட்சிக்கு வந்து மாத்தி காட்டு என்று சொல்லும் வசனம் ஒன்று வரும். அதேபோல் 14 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கு வந்து மனிதர்கள் இழுக்கும் கை ரிக்ஷாவை ஒழித்தார் கருணாநிதி. முதலில் அவர் ஒரு படைப்பாளி.

-விளம்பரம்-

கருணாநிதி குறித்து சொன்னது:

அப்படிப்பட்ட படைப்பாளிக்கு கலைத்துறையினர் சேர்ந்து நூறாவது ஆண்டு விழா கொண்டாடுவதை முக்கிய விழாவாக நான் பார்க்கிறேன். கருணாநிதிக்கும் அவரது எழுதுகோலுக்கும் நான் நிறைய மரியாதைகள் கொடுக்கிறேன். அவரைப் பார்த்துள்ளேன், ஆசீர்வாதமும் பெற்று உள்ளேன் என்று உணர்வுபூர்வமாக பேசி இருக்கிறார். இப்படி சூர்யா பேசி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நெட்டிசன் விமர்சனம்:

இதை நெட்டிசன் ஒருவன், கூத்தாடி புத்திய காட்டிட்டான். ஆமா யாருடா தாழ்த்தப்பட்ட மக்கள். ஆமா நீ என்ன உயர்ந்த புடுங்கின்னு சொல்ல வறியா. ஒட்டுமொத்த தமிழ் மக்களும் போட்ட பிச்சையில தானடா இன்னக்கி உங்க குடும்பம் இப்படி வளர்ச்சி அடைஞ்சிறுக்கு. கருணாநிதி இல்லன்னா தமிழ்நாடே இல்லாத மாதிரி உருட்டுற என்று விமர்சித்து பதிவிட்டு சூர்யாவை விமர்சித்து இருக்கிறார்.

Advertisement