2ரூ இட்லி, சாப்பிட்டவர்கள் சொல்வது தான் கணக்கு – இந்த காலத்திலும் இப்படி ஒரு இட்லி வியாபார பாட்டி.

0
1492
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் உணவு விலைவாசி பொறுத்த வரை ஒரு இட்லி 10 ரூபாய் முதல் 15 வரை விற்கப்பட்டு வருகிறது. ஆனால் இன்று வரைக்கும் தனம் பட்டி குறைந்த விலையில் தான் விற்று வருகிறார். அந்த பாட்டி 2 ரூபாய்க்கும் விற்று வருகிறார். அதில் சட்னி, சாம்பார் மற்றும் மாவு அரைப்பது முற்றிலும் இவர் தான் செய்து வருகிறார். 10 ரூபாய்க்கு சாப்பிட்டால் வயிறு நிறைம்பிவிடும் என்கிறனர் அங்கு உணவு அருந்திய நபர்கள்.

-விளம்பரம்-

புதுக்கோட்டை மாவட்டம் காந்தி நகரில் அமைந்துள்ளது தனம் பட்டியின் குடிசை. அந்த வீட்டிற்குள் செல்ல வேண்டும் என்றால் சற்று குனித்து தான் செல்ல வேண்டும். அந்த குடிசையில் நாற்காலி மேசை ஏதும் கூட இருக்காது. 84 வயதிலும் சுறுசுறுப்பாக அந்த பட்டி அங்கு வேலை செய்து கொண்டு இருப்பார். அங்கு திண்ணையில் மட்டும் தான் அமர்ந்து சாப்பிட முடியும். அந்த சிறிய குடிசைக்குள் சுட சுட இட்லி ஒரு பக்கம் தயாராகி கொண்டு இருப்பதை அறிய முடியும்.

- Advertisement -

மேலும் அந்த பாட்டி கூறுகையில், “நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் அறந்தாங்கி பக்கத்தில் இருக்கும் சிதம்பரம்விடு தான் ஊர். எங்களுக்கு 1960 திருமணம் முடிந்தது அப்போது அவர் ஒரு சிறிய டீ கடை மட்டுமே வைத்திருந்தார். திருமணம் முடிந்த பின் நாங்கள் இருவரும் புதுக்கோட்டைக்கு வந்துட்டோம். ஆரம்ப கட்டத்தில் டீ கடையை வைத்து பிழப்பு நடத்தி வந்தோம் ஆனால் அது சரியாக வருமானம் வரவில்லை. அதன் பிறகு இட்லி கடை ஒன்றை ஆரம்பித்தோம். அப்போது ஒரு இட்லியை 10 பைசாவிற்கு விற்று வந்தோம். மற்ற கடைகளை விட நம்ம கடையில் விலை சற்று குறைவாக தான் இருக்கும்.

நம்மள தேடி வரவங்க பசிய போக்கணும் அது தான் முக்கியோம்னு நினைச்சோம். நம்ம போதும்னு சொல்ற ஒரே விஷயம் உணவு மட்டும் தான். யாராக இருந்தாலும் வயிறு நிறைந்ததற்க்கு பின் அவர்களால் சாப்பிட முடியாது. நாங்கள் இட்லி கடையை நடத்தி தான் 3 பசங்களையும் படிக்க வெச்சோம் அதன் பிறகு அவருக்கு கிட்னியில பிரட்சனை ஏற்பட்டதால் அவரை கடைக்கு வரவேண்டாம் என்று சொல்லி இருந்தோம். இந்த கடையை நிறுத்த மனம் வரவில்லை கூலி வேலை செய்வோர் முதல் பள்ளிகூட மாணவர்கள் வரை வந்து சாப்பிடுவார்கள்.

-விளம்பரம்-

அவர்களும் சாப்பிட்டு பழகி விட்டனர் நானும் கொடுத்து பழகிட்டேன். அவர்கள் சாப்பிடும் இட்லியை நான் கணக்கு வைத்து கொள்ள மாட்டேன் அவர்களே அதை கணக்கு வைத்து கொள்வர்கள். ஒரு நாளைக்கு 200 ரூபாய் வரை கிடைக்கும் அதை வைத்து விறகு மாவு வாங்க சற்று கஷ்டமாக இருக்கும் ஆனால் அதையெல்லாம் சமாளித்து வாங்கிவிடுவேன். ரொம்ப காலமாக ஒரு ரூபாய்க்கு தான் விற்று வந்தேன் விலைவாசி ஏறிய போது கூட நான் ஏற்றாமல் தான் இருந்தேன்.

தற்போது இரண்டு வருடமாக தான் இரண்டு ரூபாய்க்கு விற்று வருகிறேன். இங்கு வருகின்ற பிள்ளைகள் குடிசைக்கு பதிலாக வேறு கட்டி தரோம் என்பார்கள் ஆனால் நான் அதை வேண்டாம் என்று சொல்லிவிடுவேன். என்னுடைய பிள்ளைகளும் ஒய்வு எடுக்க சொன்னார்கள் எனக்கு தான் இந்த இட்லி கடையையும் இந்த பிள்ளைகளையும் விட்டு மனசு வரவில்லை” என்று அந்த பாட்டி கூறினார்.                                    

Advertisement