தமிழ் சினிமாவில் கமலுக்கு பின் நடிப்பின் நாயகனாக பெயர் எடுத்தவர் நடிகர் விக்ரம். தமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் நடித்து வந்தாலும் இவருக்கு ஒரு திருப்புமுனை கொடுத்தது ‘சேது’ திரைப்படம் தான். அந்த படத்திற்கு பின்னர் விக்ரம் நடித்த பல படங்கள் மாஸ் வெற்றி அடைந்தது. ஆனால், சேது படத்திற்கு பின் விக்ரமுக்கு ஒரு மாஸ் பிம்பத்தை ஏற்படுத்தி கொடுத்தது தில் திரைப்படம் தான். தரணி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் மாபெரும் சூப்பர் ஹிட் அடைந்தது.
தில் திரைப்படம் வெளியாகி இன்றோடு 20 வருடங்கள் ஆகிறது. விக்ரம், லைலா, நாசர், விவேக், ஆஷிஷ் வித்யார்த்தி, வையாபுரி என்று பலர் நடித்த இந்த படத்தில் பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கர் மகளும் நடித்துள்ளார் என்பது பலரும் அறிந்திராத ஒன்று. காமெடி நடிகர் ரோபோ ஷங்கர் மேடை காமெடியனாக தனது பயணத்தை ஆரம்பித்து தனது கடின உழைப்பின் மூலம் தற்போது சினிமாவில் காமெடியனாக கலக்கிவருகிறார்.
ரோபோ ஷங்கர் மகளான இந்திரஜா பிகில் படத்திற்கு முன்பாக டிக் டாக் செயலியில் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு இருந்தார். அந்த வீடியோவை பார்த்த அட்லி இவரது நடிப்பை கண்டு வியந்து போய் பின்னர் இவருக்கு பிகில் படத்தின் வாய்ப்பினை கொடுத்தார். தனது மகள் முதல் படத்திலேயே விஜயுடன் நடிப்பதை எண்ணி ரோபோ சங்கர் கண்ணீர் மல்க ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றையும் செய்திருந்தார்.
மேலும் பிகில் திரைப்படத்திற்குப் பின்னர் தனது மகளுக்கு பல்வேறு படங்களில் நடிக்கும் வாய்ப்பு வருவதாகவும் ரோபோ ஷங்கர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நடிகர் ரோபோ ஷங்கர் ஷங்கர் மனைவி விக்ரம் நடிப்பில் வெளியான தில் படத்தில் ஒரு சிறிய காட்சியில் லைலாவுடன் நடித்துள்ளார். தில் படத்தில் லைலா குல்ஃபி செய்ய கற்றுக்கொடுக்கும் ஒரு காட்சியில் தான் அவர் நடித்துள்ளார். அந்த புகைப்படம் இதோ.