எங்களுக்கு எல்லாம் வேலையில்லை ? டைம் ஆச்சின்னு பாதியில் கிளம்பிய வரலட்சுமியால் கடுப்பான பேரரசு.

0
502
perarasu
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்ந்தவர்பேரரசு. இவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்து வரவேற்பையும், அதுமட்டுமில்லாமல் பேரரசு படங்கள் என்றாலே சண்டை, பாசம், நகைச்சுவை, அதிரடி வசனங்கள் என்று மசாலா திரைப்படமாக இருக்கும். அந்த வகையில் நடிகர் விஜய்யுடன் எடுத்த சிவகாசி, திருப்பாச்சி போன்றவை பெரிய வெற்றிடங்கள் என்று கூறலாம். தற்போது இவர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

-விளம்பரம்-

அந்த வகையில் சமீபத்தில் “அரசி” என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியிட்டு நடைபெற்றது. இதில் வழக்கம் போல கே ராஜன், இயக்குனர் பேரரசு மற்றும் அப்படத்தின் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் படத்தின் கதாநாயகியாகிய வரலட்சிமி பேசும் போது இந்த விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி எல்லோருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் என்று கூறிய வரலட்சிமி சரத்குமார் தனக்கு முக்கியமான வேலை இருப்பதினால் விமான நிலையம் செல்ல வேண்டியுள்ளது என்று கூறி அந்த படத்தின் காதநாயகியே அங்கிருந்து சென்று விட்டார்.

- Advertisement -

இதற்கு பிறகு அந்த நிகழ்ச்சியும் சிறப்பு விருந்தினரான இயக்குனர் பேரரசு பேசிய போது இந்த படத்தின் கதாநாயகி சென்றது விருந்தினர்கள் வந்து வாழ்த்துவதற்காக காத்துக்கொண்டிருக்கு போது மணமகள் மாணவறையை விட்டு வெளியே சென்றது போல இருந்தது. நீங்கள் என்னை ஆசிர்வதித்து விட்டு செல்லுங்கள் எனக்கு முக்கியமான வேலைகள் உள்ளன என்று மணமகள் சொன்னால் எப்படி இருக்கும், அதேதான் இந்த இடத்தில் நடந்திருக்கிறது என்று கூறினார் பேரரசு.

மேலும் இயக்குனர் பேரரசு பேசுகையில் “எங்களுக்கு வேலை இல்லை போலிருக்கிறது” திரைப்படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாக்களைப் பொருத்தவரை நாங்கள் வழக்கமாக வருபவர்களை போன்றவர்கள் தான். நடிகை வரலட்சிமி தனக்கு வேலை இருப்பதாக சொல்லி விட்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நிலையில், இப்படத்தின் கதாநாயகனும் வெளியேறியுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியின் நாயகனான இசையமைப்பாளரையே காணவில்லை என்று தயாரிப்பாளர் கோவப்பட்டார்.

-விளம்பரம்-

இந்த விஷியத்தை பார்க்கும் போது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆடியோ வெளியீட்டு விழாவுக்குத் தேதியைத் தேர்ந்தெடுக்கும் முன்னரே கதாநாயகன், கதாநாயகி, இசையமைப்பாளர் ஆகியோரிடம் தேதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தயாரிப்பாளர்களுக்கு அறிவுரை கூறினார் பேரரசு. மேலும் படத்தின் அவர்கள் இல்லாமல் நாம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு எதற்கு இந்த நிகழ்ச்சி.

படத்தில் நடித்தவர்கள் கலந்து கொண்டால்தான் படத்தின் செய்தி மற்றவர்களுக்கு பரவும் என்று அவர் கூறியிருந்தார். இருந்தாலும், இறுதியில் “அரசி” படம் மாபெரும் வெற்றி படமாக அமைய வேண்டும் என்று வாழ்த்தி இந்த படத்தின் மூலம் வரலட்சிமி அடுத்த விஜய சாந்தி ஆக வேண்டும் என்று கூறி விடைபெற்றார் இயக்குனர் பேரரசு.

Advertisement