‘நீ என்ன நயன்தாராவா’னு கிண்டல் பண்ணாங்க..! ஆனால் நயன்தாரா என்னை மலைக்க வைத்தார்..! தர்மதுரை ஜீவா ..!

0
557
Dharmaduraijeeva

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “தர்மதுரை” படத்தில் திருநங்கையாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் திருநங்கை ஜீவா சுப்பிரமணியம்.தற்போது “மா, லட்சுமி” போன்ற குறும் படங்களை இயக்கிய சர்ஜுன், நயன்தாராவை வைத்து எடுத்து வரும் குறும் படம் ஒன்றில் நடித்து வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஜீவா சுப்பிரமணியம் நயன்தாரா குறித்து பேசியுள்ளார்.

jeeva subramaniam

அந்த பேட்டியில் பேசிய ஜீவா சுப்பிரமணியம்,தர்மதுரை படம் இந்த சமூகத்துல எனக்கான ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்தி தந்தது. அதன் பின்னர் எத்தனையோ இயக்குனரிடம் வாய்ப்பு தேடி அலைந்திருக்கேன். அப்போது ஒரு இயக்குனர் ‘நீ என்ன நயன்தாராவா,பெரிய ஸ்டார்னு நினைப்பா?’ என்று என்னை கேலி செய்தார்.

அப்போது நான் முடிவு பண்ணினேன் கண்டிப்பாக நயன்தாராவுடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்று.சீக்கிரம் நயன்தாராவுடன் ஒரு படத்தில் நடித்து விட வேண்டும் என்று நயன்தாரா கமிட் ஆகியுள்ள அத்தனை ப்ரொடக்ஷன் கம்பெனிக்கும் வாய்ப்பு தேடி அலைந்தேன்.

ஆனால், நிறைய பேருக்கு நான் திருநங்கை என்ற பிம்பம் இடையூறாக தெரிந்தது. ஆனால், நான் நடித்த “அவன் நங்கை” என்ற படத்தை பார்த்து விட்டு இயக்குனர் சர்ஜுன் எனக்கு கால் செய்து நயன்தாரா நடிக்கும் படத்தில் நீங்கள் அவருக்கு தோழியாக நடிக்கிறீர்கள் என்று கூறியதும் நான் சந்தோஷத்தில் துள்ளி குதித்தேன்.

நான் நயன்தாராவை முதன் முதலில் படப்பிடிப்பு தளத்தில் பார்த்த போது அவரே என்னிடம் வந்து ‘எப்படி இருக்கீங்க சாப்டீங்களா’ என்று கேட்டதும் எனக்கு பிரம்மிப்பா தெரிஞ்சாங்க. அதே போல ஒரு முறை நான் நயன்தாராவின் பக்கத்தில் நீண்ட நேரம் நின்றுகொண்டிருந்தேன். அப்போது அவர் என்னிடம் எதற்காக நிக்கிறீரங்க போய் ஒக்காருங்க என்றதும், நான் ‘இல்லை மேடம் உங்கள் ப்ராப்பர்ட்டி ஒன்ன என்கிட்ட கொடுத்தாங்க அதான் நின்னிட்டு இருக்கானு’ சொன்னேன்.

உடனே நயன்தாரா, ப்ராப்பர்ட்டி மேனேஜரை அழைத்து, என் ப்ராப்பர்டியா என்னிடம் தானே கொடுக்க வேண்டும்,எதுக்கு அவங்க கிட்ட கொடுத்தீங்க. வீணா அவங்க நின்னுட்டு இருகாங்க என்று சொன்னதும் நான் நயன்தாராவை கண்டு வியந்து போனேன்.இப்போது நான் அவருடன் நடித்து வருகிறேன் விரைவில் அவர் மனதில் இடம் பிடிப்பேன் என்று கூறியுள்ளார் ஜீவா சுப்பிரமணியம்.