விஜய் பட நடிகையே ‘சர்கார்’ டீஸரை இன்னும் பார்க்கலயாம்..!

0
237
Sarkar

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள “சர்கார்” படத்தின் டீஸர் கடந்த 19 ஆம் தேதி வெளியாகி இருந்தது. வெளியான நேரத்தில் இருந்து தற்போது வரை பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது.அதே போல இதுவரை வெளியான டீஸரிலே குறைந்த நேரத்தில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட டீஸர் என்ற சாதனையையும் பிடித்துள்ளது.

Devaiyani
சாமான்ய மக்களை தாண்டி பல்வேறு திரையுலக பிரபலங்களும் “சர்கார்” படத்தின் டீசரை கண்டு தங்களது கருத்துக்களை வலைதளத்தின் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், நடிகை தேவையணி இதுவரை “சர்கார் ” படத்தின் டீசரை பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

விஜயுடன் “பிரண்ட்ஸ்” படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.தற்போது “எழுமின்” என்ற படத்தில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை தேவையாணியிடம் “சர்கார்” படத்தின் டீஸர் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அப்போது அதற்கு பதிலளித்த நடிகை தேவையணி, இன்னும் நான் பார்க்கவில்லை.ஆனால்,என்னுடைய மகள் தான் பார்த்தால். நானும் பாக்கணும் என்று தெரிவித்துள்ளார் நடிகை தேவையணி.