தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்திற்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் பற்றி அனைவரும் அறிவோம். அஜித்துக்காக அவரது ரசிகர்கள் எதையும் செய்யவும் தயாராக இருப்பார்கள். சாமானிய மக்கள் கூட அஜித்தின் தீவிர ரசிகர்களாக இருப்பார்கள் என்பதற்கு சான்றாக உள்ளது இந்த வீடியோ.
#தலரசிகர்கள்
தமிழ்நாட்டின் முதல் ஆட்டோ ஓட்டும் பெண்மணி சரோஜா, #தல க்காக Opening Song எழுதி வைத்திருக்கிறார் – என்ற வீடியோ வைரலாகி வருகிறது.@templecityAFC@ArunbharathiA @SureshChandraa pic.twitter.com/44e6e32lKj— Kayal Devaraj (@devarajdevaraj) October 18, 2018
நடிகர் அஜித் தற்போது “விஸ்வாசம்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில் அஜித்தின் தீவிர ரசிகர், தமிழகத்தை சேர்ந்த முதல் ஆட்டோ ஓட்டும் பெண் ஒருவர் அஜித்திற்காக ஒரு பாடலையும், ஒரு கவிதை புத்தகத்தையும் எழுதியுள்ளார்.
சமீபத்தில் அந்த பெண் ரசிகை அஜித்தின் “விஸ்வாசம்” படத்தில் தான் எழுதிய பாடல் ஓப்பனிங் பாடலாக வர வேண்டும் என்பது தான் ஆசை என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.