#29YearsOfUzhaippali – சம்பள பிரச்சனை, ரெட் கார்ட், முட்டுகட்டை போட்ட விநியோகிஸ்தர்கள் – பல தடையை உடைத்து ஹிட் அடித்த உழைப்பாளி.

0
2165
ulaipali
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. அந்த வகையில் ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த படங்களில் ஒன்று உழைப்பாளி. இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளியாகி இருந்த படம் உழைப்பாளி. இந்த படத்தில் ரஜினிகாந்த், ராதாரவி, ரோஜா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் சாதனை படைத்திருந்தது.

-விளம்பரம்-

மேலும், இந்த படம் வெளியாகி 29 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. இதனை ரசிகர்கள் பலரும் வழக்கத்தைவிட உற்சாகமாக கொண்டாடி இருந்தார்கள். ஆனால், இந்த படம் வெளிவருவதற்கு விநியோகஸ்தர்கள் ரெட் கார்டை போட்டிருந்தார்கள். இதையெல்லாம் உடைத்தெறிந்து தான் ரஜினியின் உழைப்பாளி படம் வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது அதைப் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். தயாரிப்பு செலவு அதிகரிக்க நடிகர்களின் சம்பளமே காரணம் என்ற குற்றச்சாட்டு 90களின் ஆரம்பத்திலேயே இருந்தது. இதனால் விநியோகஸ்தர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் ஆகிய மூன்று சங்கமும் ஆலோசனை கூட்டம் நடத்தி இருந்தது.

- Advertisement -

ரஜினி படத்துக்கு ரெட் கார்ட்:

அதில் கலந்து கொண்ட ரஜினி நடிகர்களின் மார்க்கெட் வேல்யூவை வைத்து தான் சம்பளம் தருகிறார்கள். நீங்கள் வரியையும், திரையரங்கு வாடகையை குறைக்கச் சொல்லுங்கள். அதை செய்தால் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். இதனால் அந்த பிரச்சினைக்கு எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் கலைந்தது. அப்போது ரஜினியும் பிஸியாக படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் விநியோகஸ்தர்கள் சங்கம் ரஜினி படங்களை வாங்குவதில்லை என்று ரெட் கார்ட் போட்டது. இது திரையுலகில் பயங்கர சர்ச்சையை கிளப்பியது.

உழைப்பாளி படம் சந்தித்த பிரச்சனை:

ஏன்னா, ஒரு நடிகரின் படத்துக்கு வினியோகஸ்தர்கள் சங்கம் ஏற்காவிட்டால் யாரும் படத்தை வாங்க முன்வர மாட்டார்கள் என்பது குறிப்பிடதக்கது. இது தெரிந்தும் விஜயா புரொடக்ஷன் ரஜினியின் படத்தை தயாரிப்பதில் உறுதியாக இருந்தது. மேலும், இந்த பிரச்சனை குறித்து ரஜினி, கமலை சந்தித்து பேசினார். அடுத்த நாளே உழைப்பாளி படத்தின் அறிவிப்பு வெளியானது. பி.வாசு படத்தை 58 நாட்களில் எடுத்து முடித்தார். படம் வெளியாக தயாராக இருந்தது. ஆனால், விநியோகஸ்தர்கள் சங்கம் ரெட் கார்டு விலக்கிக் கொள்ளவில்லை என்பதால் படத்தை நேரடியாக திரையரங்குக்கு தர ரஜினி முடிவு செய்தார்.

-விளம்பரம்-

ரெட் கார்ட்டை விலக்கிய விநியோகஸ்தர்கள்:

பின் என்எஸ்சி எனப்படும் நார்த் ஆற்காடு, சௌத் ஆற்காடு, செங்கல்பட்டு ஏரியா விநியோக உரிமையை ரஜினி வாங்கி வெளியிட்டார். படமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அதுமட்டுமில்லாமல் 150 தினங்களுக்கு மேல் படம் ஓடியிருந்தது. இதனால் திரையிட்ட அனைத்து திரையரங்கும் நன்றாக சம்பாதித்து இருந்தது. உழைப்பாளியின் வெற்றி விநியோகஸ்தர்களை அதிகமாக யோசிக்க வைத்தது.

நன்றி தெரிவித்த ரஜினி:

பின் தொடர்ந்து ரஜினி படங்களை திரையரங்குக்கு தந்தால் நம்முடைய பிழைப்பு போய்விடும் என்பதை உணர்ந்த விநியோகஸ்தர்கள் இறங்கி வந்து ரெட் கார்ட்டை விலக்கி விட்டார்கள். மேலும், ரஜினியும் தனக்கு துணையாக இருந்த அனைவருக்குமே நன்றி கூறி செய்த தவறை உணரும் பக்குவம் வரும் போது தான் உண்மையான மனிதர்கள் ஆகிறோம். இனி வரும் காலங்களில் நமக்குள் மனக்கசப்பு இல்லாமல் எல்லோரும் சிறப்புடன் வாழ நாம் ஒற்றுமையுடன் பாடுபடுவோம் என்று கூறியிருந்தார். இப்படி பல போராட்டங்களுக்கு பிறகு தான் உழைப்பாளி படம் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்து இருந்தது.

Advertisement