666, வெள்ளை புடவை வேலைக்காரி, கருப்பு நாய் – 90ஸ் கிட்ஸ்களை தூங்கவிடாமல் செய்த ஜென்ம நட்சத்திரம் திரைப்படம்.

0
1243
Jemna
- Advertisement -

இன்றைய காலகட்டங்களில் பேய் படம் என்றால் அது காமெடி படமாக இருந்து வருகிறது. அது போன்ற படங்களை  பார்ப்பவர்கள் அவர்களுக்கு பயம் என்பது வராமல் சிரிப்பதாக வந்து வருகிறது. இன்றைய காலகட்டங்களில் இருக்கும் குழந்தைகளுக்கு திகில் என்றாலே என்ன என்பது தெரியாமல் தான் இருந்து வருகிறார்கள். ஆனால் அந்த காலம் கட்டக் கட்டத்தில் வந்த திகில் திரைப்படங்களை பார்ப்பதற்கு மேலும் தனியாக அமர்ந்து பார்ப்பதற்கும் மனதில் தைரியம் இருந்தால் மட்டுமே அது போன்ற படங்களை பார்த்து முடியும்.

-விளம்பரம்-

அதுபோன்ற திகில் படங்களை பார்த்த பிறகு அன்று நாள் இரவு தூக்கம் வராது மற்றும் சில நாட்களுக்கு இரவில் சரியாக தூக்கம் வராமல் இருக்கும். அதுபோன்ற திரைப்படங்களை பார்க்கும் பெரியோர்களுக்கு இந்த நிலைமை என்றால் அப்போது வீட்டில் இருக்கும் சிறுவர்களுக்கு  எது போன்ற திகில் இருக்கும். அதுபோன்ற திரைப்படம் தான் ஜென்ம நட்சத்திரம். ஜென்ம நட்சத்திர திரைப்படத்தில் தக்காளி சீனிவாசன் இயக்கியத்தில் ரமணாத் ஜி ஆனந்த ராமன் சிந்துஜா மற்றும் பேபி சித்ரா நாசர் விவேக் நடித்திருந்தனர்.

- Advertisement -

இப்படத்தின் பெயரை சொன்னாலே இப்போது உள்ள 90 கிட்ஸ் கூட பயப்படுவார்கள்இந்த திரைப்படம் வெளியாக இன்றுடன் 32 வருடங்கள் முடிவடைகிறது. இது 90ஸ் கிட்ஸ் கல எல்லோரையும் பயமுறுத்திய ஒரு திரைப்படம். இந்தத் திரைப்படம் வெளியான தீ ஓமன் திரைப்படத்தின் ரீமேக் ஆகும் இந்த தீ ஓமன் திரைப்படம் 1976 ஆம் ஆண்டு வெளியானது. இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து தான் 1991 ஆம் ஆண்டு ஜென்ம நட்சத்திரம் திரைப்படம் வெளியானது.

இந்த திரைப்படத்தின் கதை என்னவென்று பார்த்தால் ஒரு மருத்துவமனையில் ஒரே நேரத்தில் இரு கர்பிணி பெண்களுக்கு குழந்தை பிறக்கிறது. அதில் ஒரு கர்பிணி பெண்ணுக்கு குழந்தை இறந்து பிறக்கிறது மற்றொரு கர்பிணி பெண்ணுக்கு குழந்தை பிறந்ததும் அந்த பெண் இறந்து விடுகிறாள். ஆகவே அங்கு அந்த குழந்தைகளை மாற்றி இறந்த குழந்தைக்கு பதிலாக உயிருடன் இருக்கும் குழந்தையை மாற்றி வைத்து அந்த உயிருடன் இருக்கும் குழந்தையை தன் குழந்தை போல வளர்த்து வருகிறாள்.

-விளம்பரம்-

ஆனால் அந்த குழந்தை வளர வளர பேய் குழந்தை போலவே மாறி வந்தது. அதன் உண்மையை கண்டுபிக்க சென்றால் அவர்களையும் அது கொலை செய்து விடுகிறது. என படம் முழுவதும் பயமாகவே இருக்கும். என்னதான் இந்த திரைப்படம் அனைவரையும் பயத்தை காட்டினாலும் 32 வருடங்களுக்கு பிறகும் இன்றும் அந்த திரைப்படத்தை பார்த்தாலும் சற்று பயமாக தான் இருக்கும்.        

Advertisement