இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படம் நேற்று வெளியானது. மெர்சல் படத்தை போலவே இந்த படத்திலும் அரசியல் வாதிகளை கிழித்து தொங்கவிட்டுள்ளனர். இதனால் சில அரசியல் கட்சிகளும் இந்த படத்திற்கு போர் கொடி தூக்கியுள்ளது.
Google search trends peak for #49P after the release of #Sarkar. https://t.co/677MFHqDia@ARMurugadoss #BlockBusterSarkar #Thalapathykingofboxoffice pic.twitter.com/szBBPY1vIH
— Sun Pictures (@sunpictures) November 7, 2018
இந்த படத்தில் கள்ள ஒட்டு குறித்து பல விழிப்புணர்வு காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. அதில் முக்கியமாக படத்தில் 49P என்ற இந்திய அரசியல் சாசன சட்டத்தை பற்றி மிகவும் அழுத்தமாக சொல்லபட்டுள்ளது.
நாம் அனைவருக்கும் 49-0 அதாவது நோட்டா என்ற ஒரு சட்டம் இருப்பது தெரியும். அதுவும் சில ஆண்டுகளுக்கு முன்பே நமக்கு தெரியவந்தது. ஆனால், சர்கார் படத்தில் 49-p என்ற சட்டம் இருக்கிறது, அந்த சட்டத்தை வைத்து ஒருவரின் ஒட்டு கள்ள வோட்டாக போடப்பட்டால் பாதிக்கப்பட்ட நபர் வழக்கு தொடர்ந்து தகுந்த ஆதாரத்துடன் மீண்டும் வாக்களிக்கலாம்.
இப்படி ஒரு சட்டம் இருப்பது நம்மில் பல பேருக்கு தெரியாத நிலையில் சர்கார் படத்தின் மூலம் மக்கள் அனைவருக்கும் தெரியபடுத்தியுள்ளனர். இதனால் படம் வெளியான பின்னர் பல பேர் கூகுளில் 49P என்ற வார்த்தையை தேடியுள்ளனர். அது கூகுள் தேடலில் ட்ரெண்டாகவும் இருந்து வருகிறது.