சர்கார் படத்தை எதிர்க்கும் அரசியல் கட்சியினர்…! விஜய்க்கு ஆதரவாக பேசிய முக்கிய தலைவர்…!

0
2
Sarkar

மெர்சல் படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்து வெளிவந்துள்ள படம் சர்கார் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தப் படத்தில், நடிகர் விஜய் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர்.

Vaiko

கலவையான விமர்சங்களை பெற்று வரும் இந்த படத்தில் அரசியல் நோக்கத்திற்காக சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை நீக்கா விட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் அ.இ.அ.தி.மு.க அமைச்சர் கடம்பூர் ராஜூதெரிவித்திருந்தார் தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து பா ஜ க கட்சியின் தேசிய செயலாளரான எச் ராஜாவும் சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் மதிமுக தலைவரான வைகோ ‘சர்கார்’ படத்திற்காக நடிகர் விஜய்க்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய வைகோ,நடிகர் விஜய் மிகவும் பண்பானவர் அனைவரிடமும் மதிப்புடன் நடந்து கொள்வார். திரைப்படங்கள் மற்றும் நாடகத்தின் வாயிலாக சமுதாயத்திற்கு நல்ல கருத்துக்களை சொல்வது வழக்கமான ஒரு விடயம் தான் என்று கூறியுள்ளார்.

Advertisement