நடிகர் அஜித் தற்போது சிவா இயக்கி வரும் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையன்று வெளியாக இருக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் தற்போது நடந்து வருகிறது.
From The sets of #Viswasam
A Co-Dancer Saravanan Passed away at Hospitals Later the real life hero known for his magnanimity spent almost rupees 8 Lakhs to arrange for the body to be flown to Chennai where the 42 year old Saravanan was cremated in Saidapet on Sunday afternoon. pic.twitter.com/1d9f13EzSl— Kanchipuram Thala Ajith Fans Club (@kanchithalafans) November 7, 2018
இந்த படத்தின் படத்தின் படப்பிடிப்புகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடைய இருக்கிறது. இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் தற்போது படமாக்கபட்டு வருகிறது. அதற்காக அஜித் மற்றும் பட குழுவினர் ஆந்திராவில் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்தில் இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்று படமாக்கபட்டுள்ளது. இந்த பாடல் காட்சியின் படப்பிடிப்பின் போது நடன கலைஞசரான சரவணன் என்பவர் திடீரென வாந்தி எடுத்து மயக்கமானார். இதையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த சரவணனுக்கு வயது 42. சரவணன் உடலை சுமார் 8 லட்ச ரூபாய்க்கு மேல் தனது சொந்த பணத்தை செலவு செய்து ஆந்திராவில் இருந்து சென்னை சைதாப்பேட்டை எடுத்து வரும்வரை அனைத்து செலவுகளையும் அஜித் கவனித்திருக்கிறார். மேலும், சைதாப்பேட்டையில் நடைபெற்ற இறுதிச் சடங்கிலும் பங்கேற்றிருக்கிறார்.இந்த தகவலை அறிந்த அஜித் ரசிகர்கள் அவரது நல்ல குணத்தை கண்டு மிகவும் நெகிழ்ந்துள்ளனர்.