கேஜிஎப் பட ஹீரோ பிறந்த நாளுக்கு உலகிலேயே மிகப்பெரிய பரிசை கொடுத்த ரசிகர்கள். வைரலாகும் புகைப்படம்.

0
7345
- Advertisement -

பொதுவாகவே தெலுங்கு படங்கள் தமிழிலும் டப் செய்து வெளியிடுவது வழக்கமான ஒன்று. ஆனால், கன்னட மொழியில் இருந்து எந்த படமும் தமிழ் மொழிக்கு டப் செய்து வெளியாவது அரிதான ஒன்று. இந்நிலையில் தான் முதன் முறையாக ஒரு கன்னட படம் தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அந்த படம் கன்னட நடிகர் யாஷ் நடித்த “கே ஜி எப்” திரைப்படம்தான் . இவர் கன்னட சினிமாவின் ராகிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர்.

-விளம்பரம்-

நடிகர் யாஷ் அவர்கள் ‘ஜம்பட ஹுகுடி’ என்ற கன்னட படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் கன்னடத்தில் பல்வேறு படங்களில் நடித்தார். ஆனால், இவருக்கு இந்த அளவு பெயரும் புகழை ஏற்படுத்தி தந்தது கே ஜி எப் திரைப்படம் தான். யாஷ் நடித்து உள்ள இந்த “கே ஜி எப்” திரைப்படம் இதுவரை வெளிவந்த கன்னட திரைப்படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி வெளியாகிய படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படம் தமிழ் மொழி மட்டுமல்லாது ஐந்து மொழிகளில் டப் செய்யப்பட்டு உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.

- Advertisement -

அதோடு இந்த படம் மாபெரும் வெற்றியடைந்து வசூல் சாதனை செய்தது. கன்னட சினிமாவில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. கே ஜி எப் படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இந்த படத்தில் சில பிரச்சனைகள் இருப்பதால் படம் வெளியாக நீண்ட நாட்கள் ஆகும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று நடிகர் யாஷ் அவர்களின் பிறந்த நாள். இதனால் சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் சோஷியல் மீடியாவில் அவருக்கு வாழ்த்துக்களை குவித்த வண்ணம் வருகின்றனர்.

Image

-விளம்பரம்-

இந்த நிலையில் ஒரு சில ரசிகர்கள் நடிகர் யாஷ் அவர்களின் பிறந்த நாளுக்கு 5,700 கிலோ அளவுக்கு கேக்கை உருவாக்கி உள்ளனர். இது உலகிலேயே மிகப்பெரிய கேக் என்றும் கூறுகிறார்கள். இந்த பெரிய கேக் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி இருந்தது. தற்போது இந்த படத்தில் வடசென்னை படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் தம்பியாக நடித்த சரண் இந்த படத்தில் நடித்து உள்ளாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டது. படத்தின் போஸ்டர் எல்லாம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இரண்டாம் பாகத்தில் வில்லனாக ‘சஞ்சய்தத்’ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த வருட இறுதியில் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement