சமீபத்துல நான் பாத்து என்ஜாய் பண்ண ட்ரைலர். பாராட்டிய விஜய். ட்வீட் போட்ட ப்ரோடுயூசர்.

0
22296
vijay-magic
- Advertisement -

ஹிப் ஹாப் தமிழா என்று சொன்னாலே போதும் இளைஞர்கள் அனைவரும் துள்ளி குதித்து கொண்டாடுவார்கள். இதற்கு முன் ஹிப் ஹாப் ஆதி நிறைய ஆல்பம் பாடல்கள் வெளியிட்டு உள்ளார். அதன் மூலமாக தான் இவருக்கு சினிமா உலகில் பாட வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டும் இல்லாமல் அனிருத் அவர்கள் தான் ஹிப் ஹாப் ஆதியை “வணக்கம் சென்னை” என்ற படத்தில் ‘சென்னை சிட்டி கேங்க் ஸ்டார் என்ற பாட்டு மூலம் சினிமா உலகிற்கு அறிமுகம் படுத்தினார். அதனைத் தொடர்ந்து இயக்குனர் சுந்தர் .சியின் ஆம்பள படத்தில் பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து தனி ஒருவன், இமைக்கா நொடிகள், அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் ஹிப் ஹாப் ஆதி பாடி உள்ளார். தற்போது இவர் ஹீரோவாகவும் படங்களில் நடித்து உள்ளார். “மீசையை முறுக்கு, நட்பே துணை” உள்ளிட்ட படங்களில் நடிகர் ஆதி நடித்து உள்ளார். இந்த படங்களுக்கு பிறகு ஹிப் ஹாப் ஆதி அவர்கள் “நான் சிரித்தால்” என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை அவ்னி நடித்து மேக்ஸ் சார்பாக இயக்குனர் சுந்தர் சி அவர்கள் தயாரித்து வருகிறார். மேலும், இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ராணா அவர்கள் தான் இயக்கி உள்ளார். இந்த படத்தில் ஆதிக்கு ஜோடியாக ‘தமிழ் படம் 2’வில் நடித்த ஐஸ்வர்யா மேனன் நடித்து உள்ளார்.

- Advertisement -

இப்படத்தில் கே.எஸ்.ரவிகுமார், முனீஸ்காந்த், படவா கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எல்லாம் சமீபத்தில் தான் வெளியானது. இந்த படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறுகிறார்கள். இந்நிலையில் “நான் சிரித்தால்” படத்தின் டிரைலர் சமீபத்தில் தான் வெளியானது. டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படத்தில் ஹீரோ ஆதிக்கு சிரிக்கும் வியாதி இருப்பதால் அந்த வியாதி காரணமாக அவர் சீரியஸான நேரத்திலும் சிரிக்கும் வகையில் இந்த படத்தின் கதை அமைந்துள்ளது.

மேலும், இந்த படத்தின் டிரெய்லரில் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் போது அந்த படத்தை பார்க்குமாறு அதில் வரும் ஒரு ஏமோஷன் காட்சியில் தளபதி விஜய் அவர்கள் அழுது கொண்டு நடித்திருப்பார். அப்போ ஆதிக்கு இருக்கும் சிரிக்கும் வியாதியால் இந்த காட்சி வரும்போது சிரிப்பார். அதனால் படம் பார்ப்பவர்கள் எல்லோரும் அவரை வினோதமாக பார்ப்பது போன்ற ஒரு காட்சி உள்ளது.

-விளம்பரம்-

தற்போது இந்த படத்தின் ட்ரைலரை பார்த்து தளபதி விஜய் அவர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியது, சமீப நாட்களில் நான் பார்த்து மிகவும் என்ஜாய் செய்த ட்ரைலர்களில் நான் சிரித்தால் படத்தின் ட்ரெய்லர் ஒன்று என கூறியுள்ளார். விஜய்யின் இந்த கருத்து அவருடைய பெருந்தன்மை காட்டுவதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் ஆதிக்கு விஜய்யே வாழ்த்து சொல்லி விட்டார் என்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இப்படம் இந்தாண்டு காதலர் தினத்தன்று (பிப்ரவரி 14) ரிலீசாக உள்ளது. ஏற்கனவே 2 ஹிட் படங்களை கொடுத்த ஹிப்ஹாப் ஆதி இப்படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றி அடைவார் என்றும் கூறப்படுகிறது. இந்த படம் முழுக்க முழுக்க காமெடியை மையமாக கொண்டு உருவாகியுள்ள கதை ஆகும்.

Advertisement