தேசிய திரைப்பட விருது 68-வது தேசிய திரைப்பட விருதுகளுக்கு தேர்வான படங்கள் மற்றும் கலைஞர்களின் பட்டியலை இந்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இதில் சிறந்த நடிகர்களாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், நடிகர் சூர்யா ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்துக்கு ஐந்து விருதுகள், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என்ற படத்துக்காக மூன்று விருதுகள் மற்றும் மண்டேலா படத்துக்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன.
தேசிய திரைப்பட விருதுகள் வரலாறு :-
தேசிய திரைப்பட விருதுகள் (National Film Awards) இந்தியாவின் தொன்மையானதும் முதன்மையானதுமான விருதுகள் ஆகும் 1954ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இவ்விருதினை இந்திய அரசின் திரைப்பட விழாக்கள் இயக்கம் 1973ஆம் ஆண்டு முதல் நிர்வகித்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் அரசால் நியமிக்கப்படும் தேசிய தேர்வுக்குழு விருதுக்குரியவர்களை, படைப்புகளை தேர்ந்தெடுக்கிறது. விருதுகள் குடியரசுத் தலைவரால் தலைநகர் புது தில்லியில் வழங்கப்படுகிறது.
இவ்விழாவினைத் தொடர்ந்து துவங்கும் தேசிய திரைப்பட விழாவில் விருது பெற்ற திரைப்படங்கள் பொதுமக்களுக்காக திரையிடப்படுகின்றன. நாட்டின் பலபகுதிகளில் கடந்த ஆண்டில் வெளியான திரைப்படங்களில் இருந்து சிறந்த திரைப்படங்களும் திரைக்கலைஞர்களும் அடையாளம் காணப்படுகின்றனர். தவிர, ஒவ்வொரு பிற இந்திய மற்றும் மொழி படங்களுக்கு தனியாக விருதுகள் வழங்கப்படுகின்றன.இது இந்தியாவின் ஆஸ்கார் விருதாகக் கருதப்படுகிறது.
தேசிய திரைப்பட விருதுகள் என்பது 3 வகையாக பிரியும். ஸ்வர்ண கமலம், ரஜத் கமலம்,ஜூரி விருதுகள் என்று இருக்கும்.
ஸ்வர்ண கமலம்:
- ஸ்வர்ண கமலம் என்பது தங்க மூலம் பூசிய பதக்கம். இத்தோடு சான்றிதழ் மற்றும் காசோலை வழங்கப்படும்.
- சிறந்த பீச்சர் படம், சிறந்த இயக்குனர் ஆகிய விருதை வென்றவர்களுக்கு ஸ்வர்ண கமலத்தோடு ரூ.2.5 லட்சமும் சான்றிதழும் வழங்கப்படும்.
- சிறந்த பொழுதுபோக்கு படத்திற்கு ஸ்வர்ண கமலத்தோடு ரூ.2 லட்சம் வழங்கப்படும்.
*சிறந்த குழந்தைகளுக்கான படத்திற்கு ரூ.1.5 லட்சமும், சிறந்த புது இயக்குனர்,சிறந்த அனிமேட்டட் படங்களுக்கு ஸ்வர்ண கமலத்தோடு 1 லட்சம் பரிசாக வழங்கப்படும்.
ரஜத் கமலம் :-
- ரஜத் கமலம் என்பது வெள்ளியால் ஆனா கமல பதக்கம். இத்தோடு 50,000 பரிசுத்த தொகையாக வழங்கப்படும்.
- சிறந்த நடிகர், நடிகை, துணை நடிகர், துணை நடிகை, சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த இசையமைப்பாளர, சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கு இந்த ரஜத் கமல பதக்கமும், காசோலையும், சான்றிதழும் வழங்கப்படும்.
சிறந்த விமர்சகர்:-
சினிமா கலைக்கு ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்கியதற்காக நாடு முழுவதும் உள்ள சிறந்த விமர்சகரை நடுவர் மன்றம் கெளரவிக்க இந்த விருதை வழங்கும்.வெற்றியாளருக்கு ரொக்கப் பரிசு ரூ.75000 கிடைக்கும்..
சிறப்பு நடுவர் விருது குறிப்பிடுதல் :-
- சினிமாவில் ஒரு குறிப்பிட்ட துறையில் சிறந்த பங்களிப்பிற்காக வழங்கப்படும் சிறப்பு ஜூரி விருதும் உள்ளது. வெற்றியாளருக்கு ரொக்கப் பரிசு – ரூ. 250000 வழங்கப்படும்.
- சிறப்பு ஜூரி குறிப்பு பரிசு என்பது சிறந்த வேலையை முன்னெடுத்ததைக் குறிப்புட்டு அவர்களை ஊக்கப்படுத்த வழங்கப்படுவது. இந்த பிரிவின் கீழ் ரொக்கப் பரிசு ஏதும் இல்லை. பாராட்டுச் சான்றிதழ் மட்டும் வழங்கப்படும்.