பத்திரிக்கையாளர் முக்தார் போன் செய்து தொந்தரவு செய்வதாக விஜயலட்சுமி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் விஜயலட்சுமி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் கதாநாயகியாக நடித்தார். பின் சினிமா வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் குணச்சித்தர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதோடு இவர் சீமான் இயக்கிய வாழ்த்துக்கள் படத்திலும் நடித்திருந்தார். மேலும், இவர் தமிழில் கடைசியாக ஆர்யா நடிப்பில் வெளிவந்த பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற படத்தில் தான் நடித்திருந்தார்.
பின் கன்னட மொழிகளில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது அங்கேயும் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் தமிழ்நாட்டுக்கும்-பெங்களூருக்கும் விஜயலட்சுமி அலைந்து கொண்டு இருக்கிறார். மேலும், விஜயலட்சுமி குறித்து சில ஆண்டுகளாகவே சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் தான் உள்ளன. அதுமட்டுமில்லாமல் தனக்கு பிரச்சனை இருப்பதால் இணையத்தில் தனக்கு உதவி செய்யுங்கள் என்றும் இவர் வீடியோ போட்டிருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனிடையே நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தன்னை மூன்று வருடமாக காதலித்து விட்டு திருமணம் செய்து கொள்ளவதாக சொல்லி தற்போது மறுக்கிறார் என்று விஜயலக்ஷ்மி புகார் செய்திருந்தார். இது தொடர்பாக விஜயலக்ஷ்மி வெளியிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
விஜயலக்ஷ்மி சீமான் சர்ச்சை:
ஒரு கட்டத்தில் விஜயலக்ஷ்மி தற்கொலைக்கு கூட முயன்று இருந்தார். ஆனால், சமீப காலமாக சீமானை பற்றி எந்த விஷயத்தையும் பேசாமல் இருந்து வந்த விஜயலக்ஷ்மி கடந்த மாதம் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் காலை ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் புகார் அளித்திருக்கிறார். அதன் பெயரில் திருவள்ளூர் மாவட்ட மகளிர் கூடுதல் நீதிமன்றத்தில் நடிகை விஜயலட்சுமி ஆஜராகி தன்னுடைய வாக்குமூலத்தையும் கொடுத்திருக்கிறார். ஆனால், சீமான் தன் மீது இருக்கும் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார்.
முக்தார் அவர்களின் பதில் விரைவில் வருமா? pic.twitter.com/ahs1jL55Md
— Blue Sattai Maran (@tamiltalkies) September 2, 2023
விஜயலக்ஷ்மி அளித்த பேட்டி:
அது மட்டும் இல்லாமல் தேர்தல் பணிகளை திசைதிருப்பதற்காக தான் இத்தகைய புகார்களை அவர் மீண்டும் மீண்டும் கொடுக்கிறார் என்று கூறியிருக்கிறார். பின் சீமானை கைது செய்ய தனிப்படை போலீசார் அமைத்து இருக்கும் தகவல் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு சீமான், இது முழுக்க முழுக்க பொய். எந்த ஒரு போலீசும் என்னை தேடி வரவில்லை. நான் சென்னை செல்கிறேன். அங்கு போலீசார் என்னிடம் விசாரணை நடத்தலாம் என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் பத்திரிக்கையாளர் முக்தார் தனக்கு தொல்லை செய்வதாக விஜயலக்ஷ்மி பேட்டி அளித்து இருக்கிறார்.
வீரலட்சுமி குறித்து சொன்னது:
தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி தான் விஜயலக்ஷ்மிக்கு உறுதுணையாக இருக்கிறார். ஆனால், வீரலட்சுமிக்கு பத்திரிகையாளர் முக்தார் அகமது தொலைபேசியில் அடிக்கடி அழைத்து, விஜயலக்ஷ்மி என்னிடம் பேச வேண்டும், நான் உதவி செய்கிறேன் என்று தொல்லை தருவதாக விஜயலட்சுமி வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இதனை அடுத்து விஜயலக்ஷ்மி பேட்டியில், கடந்த இரண்டு நாட்களாக முக்தார் அகமது வீரலட்சுமிக்கு தொலைபேசியில் அடிக்கடி போன் செய்து தொல்லை செய்து இருக்கிறார். அவரிடம் இருந்து எனக்கு எந்த உதவியும் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். இருந்தாலும் அவர் எனக்கு மீண்டும் மீண்டும் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறார். பத்து நிமிடத்திற்கு முன்னால் கூட முக்தார் வீரலட்சுமிக்கு போன் செய்திருந்தார்.
முக்தார் குறித்து சொன்னது:
இதை நான் சொல்வதற்கு காரணம், நான் கொடுத்த புகாரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் முக்தார் கூப்பிடுகிறார் என்கிற பிரச்சனை வந்ததால் வழக்கின் திசை மாறும். முக்தார் உதவுவது போல் விளையாடுகிறாரா? அவரை வைத்து வேறு யாரேனும் காய் நகத்துகிறார்களா? என்று தெரியவில்லை. எனக்கு எந்த மனிதன் உதவியும் வேண்டாம். நான் ரொம்ப கடுமையாக கண்டிக்கிறேன் , என்னிடம் யாராவது விளையாட நினைத்தாலும் அவர் மீதும் புகார் கொடுப்பேன். இதுக்கு மேல முக்தார் அகமது அவர்கள் வீரலட்சுமி போனில் கூப்பிடாதீர்கள் என்று கூறியிருக்கிறார்.