நடராஜனின் வாழ்கை வரலாற்றை படமாக எடுக்க வீடு தேடி சென்ற இயக்குனர்கள் – அவர் சொல்லியுள்ள பதிலை பாருங்க.

0
1102
nat
- Advertisement -

இந்தியில் பல்வேறு கிரிக்கெட் வீரர்களின் வழக்கை வரலாற்றை மையப்படுத்தி பல்வேறு திரைப்படங்கள் வெளியாகியிருந்தது. சமீபத்தில் தோனி, சச்சின் போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இப்படி ஒரு நிலையில் தமிழகத்தில் சென்ஷேஷனல் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க இயக்குனர்கள் சிலர் நடராஜனை அணுகி இருக்கிறார்கள. இதனை நடராஜனே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி உலகில் பல முன்னணி வீரர்களை தனது பந்து வீச்சில் வீழ்த்திய நடராஜன் ஆஸ்திரேலிய சென்ற இந்திய அணியில் நெட் பவுலராக தேர்வானார்.

-விளம்பரம்-

டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் இடம்பிடித்த நடராஜன் தனது முதல் ஒரு நாள் போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன்பின்னர் நடைபெற்ற 3 டி20 போட்டிகளில் விளையாடி தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.இதன் காரணமாக டெஸ்ட் போட்டிக்கான அணியிலும் நெட் பவுலராக இணைந்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது மற்றும் இறுதி போட்டியில் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி விளையாடினார். இந்த போட்டியிலும் 3 விக்கெட் வீழ்த்தி அசத்திய நடராஜன் ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பான திறனை வெளிப்படுத்தி கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாகதிகழ்ந்தார்.

இதையும் பாருங்க : BJP பற்றி பதிவிடுவதால் சித்தார்த்துக்கு இப்படி நடக்கிறதா ? நடிகரின் பிரச்சனைக்கு ரசிகர்களின் கமெண்ட்ஸ்.

- Advertisement -

இத் தொடர் முழுவதுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நடராஜனுக்கு ஏகப்பட்ட பாராட்டுகள் குவிந்தன.அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் இருந்து தாயகம் திரும்பிய இந்திய அணியில் இருந்த நடராஜன் பெங்களூர் வந்து அங்கிருந்து கார் மூலமாக சேலம் திரும்பினார். தனது சொந்த ஊர் சின்னப்பம்பட்டி திரும்ப இருந்த நடராஜனுக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பை கூட அளித்து இருந்தனர்.

ஆஸ்திரேலிய தொடருக்கு பின் தமிழகம் திரும்பிய நடராஜன், சில தினங்களுக்கு முன் பழனி முருகன் கோவிலுக்கு சென்று மொட்டை அடித்துக் கொண்டார். இந்நிலையில், நேற்று அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது: “எனது வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க இயக்குனர்கள் சிலர் என் வீடு தேடி வந்தனர். ஆனால் இப்போது எனக்கு அதில் ஆர்வம் இல்லை. கிரிக்கெட்டில் முழு கவனத்தையும் செலுத்த விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement