சிறுத்தை சிவா இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றது. அப்பா மகள் சென்டிமென்ட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம் பல குடும்ப ரசிகர்களையும் கவர்ந்தது.
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைத்திருந்தார். மேலும், இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் செம ஹிட் அடைந்தது. அதிலும் குறிப்பாக அப்பா மகள் சென்டிமென்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘கண்ணே பாடல் ‘ பல தந்தைகளின் மனதை கவர்ந்தது.
இந்த நிலையில் ‘கண்ணான கண்ணே’ பாடலை அழுதுகொண்டே பாடும் சிறுமியின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் பொம்மைகளை வைத்து விளையாடியதற்காக அந்த சிறுமியின் தாய் கொஞ்சம் திட்ட , அவரை சமாதானப் படுத்துவதற்காக ‘கண்ணான கண்ணே’ பாடலை அழுது கொண்டு அந்த சிறுமி ஆடுவதை பார்ப்பதற்கு அத்தனை ஆனந்தமாக உள்ளது.