நடிக்க வருவதர்க்கு முன்பு இதை தான் செஞ்சிட்டு இருந்தேன்.! சூரி சொன்ன ஸ்டோரி.!

0
2064
soori
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரைப்பட உலகில் தற்போது உள்ள காமெடி நடிகர்களில் சிறந்த காமெடியனாக வருபவர் “சூரி”.இவர் சொந்த ஊர் மதுரை. இவரை பெரும்பாலும் ‘பரோட்டா சூரி’ என்று தான் அழைப்பார்கள்.இதற்கு காரணம் 2009 ஆண்டில் வெளிவந்த ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் எடுக்கப்பட்ட பரோட்டா காட்சியினால் தான் அதிக அளவில் மக்கள் மனதில் இடம் பிடித்து பரோட்டா சூரி என்று பெயரும் பெற்றார். உண்மையிலேயே பார்த்தால் அவருக்கு பரோட்டாவே பிடிக்காது என்று ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.தற்போது சினிமாத்துறையில் உள்ள பிரபலமான நடிகர்களுடன் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வரும் படத்தில் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்ற தகவலும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

-விளம்பரம்-
Related image

சமீபத்தில் இதுகுறித்து சூரி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் சினிமா துறைக்கு வருவதற்கு முன்னால் பட்ட கஷ்டங்களைப் பற்றி கூருங்கள் என்று செய்தியாளர் கேட்டபோது சூரி கூறியது , நான் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன்.அதாவது ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் அளவிற்கு வறுமை நிலை எங்களை வாட்டி கொண்டிருந்தது. இதற்காக நான் தேர்ந்தெடுத்த வழி தான் சினிமாத்துறை. சினிமா துறைக்கு போனா சீக்கிரம் சம்பாதிச்சு முன்னேறலாம் என்ற நோக்கில்தான் நான் சென்னைக்கு வந்தேன்.நான் சென்னைக்கு வந்து பல பேரை பார்த்து வாய்ப்புகள் கேட்டேன். ஆனால், ஆரம்பத்தில் எனக்கு எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை. சென்னைக்கு வந்தாலே முதலில் என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தானே. அது மட்டுமில்லாமல் படாதபாடு படவேண்டும். சென்னைக்கு வந்த உடன் தங்குவதற்கு இடம், சாப்பாடு போன்ற அடிப்படை தேவை இருந்தால் மட்டும் தான் நம்ம அடுத்த வேலையை பார்க்க முடியும். அந்த வகையில் வீடு வாடைக்கு கூட காசு இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டும் , ஒரு வேளை சாப்பாடு இல்லாமல் கூட தண்ணீரை குடித்துவிட்டு அலைந்து கொண்டிருந்தேன்.

- Advertisement -

பின்னர், கிடைக்கும் சின்ன சின்ன வேலைகளை எல்லாம் செய்து சம்பாதிக்க தொடங்கினேன். முதலில் குப்பை மண் அள்ளும் லாரியில் கிளீனராக வேலைக்கு சேர்ந்தேன். அதுமட்டுமில்லாமல் பெயிண்ட் அடிக்கும் தொழில், திருவிழாக்கள் டைமில் போடப்படும் டிராமா கூட்டங்களில் சேருவேன், சினிமா துறையில் உள்ள ஆட்களுக்கு அப்பரண்டிசாக பணி புரிவேன்.ஆகவே சென்னயில் நான் பார்க்காத வேலையே இல்லைங்க. கொஞ்ச நாள் ரொம்ப கஷ்டப்பட்டேன். ஒரு நாள் எங்க அம்மா எனக்கு போன் பண்ணி எப்படிடா இருக்குற? என்ன பண்ற, சாப்டியான்னு கேட்டாங்க. நான் எங்கம்மா சாப்பிடுறேன், தண்ணி குடிச்சிட்டு படுத்துட்டு இருக்கேன் நான் சொன்னதை கேட்டதும், எங்க அம்மா ரொம்ப கதறி,கதறி அழுது மயங்கி விட்டார்கள் என வருத்தத்துடன் கூறினார்.

ஆனால் என்னை, இந்த சினிமா துறை கைவிடல கொஞ்ச நாளிலேயே இந்த திருவிழாக்களில் போடப்படும் நாடகங்கள் மூலம் எனக்கு சினிமா துறையில் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் தான் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடிக்க எனக்கு முதல் வாய்ப்பும் கிடைத்தது. இந்த முதல் படத்திலேயே நான் அதிக அளவு பிரபலமாகி விட்டேன். அதற்கு காரணம் அந்த படத்தில் எடுக்கப்பட்ட பரோட்டா சாப்பிடும் காட்சி தான். தற்போது பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து வருகிறேன். வாழ்க்கையில் நான் சந்தோசமாக உள்ளேன் மற்றும் இந்த அளவிற்கு நான் முன்னேறுவதற்கு எனக்கு உதவி புரிந்த அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கிறேன் என்று கூறினார். மேலும், இப்போது நான் நகைச்சுவை நடிகரை தொடர்ந்து அடுத்த லெவலுக்கு அதாவது ஹீரோவாக நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கெல்லாம் மக்கள் ஆதரவும், அன்பும் தான் காரணம் என்றும் கூறியிருந்தார்.

-விளம்பரம்-
Advertisement