இஸ்லாமியருக்கு எதிரான குடியுரிமை சட்டம். புகைப்படத்தின் மூலம் மறைமுகமாக சொன்னாரா ? ஏ ஆர் ரஹ்மான்

0
36298
a r Rahman
- Advertisement -

இரண்டு ஆஸ்கார் வென்ற இசையமைப்பாளர் தன்னுடைய டுவிட்டரில் தன் முழு பெயரை வெளியிட்டு உள்ள விஷயம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சர்வதேச அளவில் இசை உலகின் சக்கரவர்த்தியாக இருப்பவர் ஏ.ஆர். ரகுமான். உலக அளவில் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஏ ஆர் ரகுமான் ஒருவர். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக சினிமா உலகிற்கு அறிமுகமானர். இவர் இந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்தனால் இவரை இசைப்புயல் என்றும் அழைத்தார்கள். அது மட்டும் இல்லாமல் ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். தற்போது இவர் ட்வீட் செய்த கருத்து சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Image result for Caa

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட பல அண்டை நாடுகளிலிருந்து வரும் முஸ்லீம்கள் அல்லாதவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் சட்டத்திற்கு எதிராக வட மாநிலங்களில் கடுமையான போராட்டம் நடந்து வருகிறது. மேலும், டெல்லி, அஸ்ஸாம், மும்பை என்று பல்வேறு பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்கள் இந்தப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். போராட்டத்தின பேருந்துக்கு தீ வைக்கப்பட்டதாக கூறி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் வன்முறையாக தடியடி செய்து தாக்கினார்கள். அதோடு பல மாணவர்களையும் கைதும் செய்தார்கள். தற்போது தமிழகத்தில் உள்ள கல்லூரி மாணவர்களும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டத்தை தொடங்கி உள்ளார்கள்.

இதையும் பாருங்க : மாஸ், டான்ஸ், பன்ச் எல்லாம் போதும். விஜய் 65வில் ரூட்டை மாற்றும் தளபதி. இது புது கூட்டணி.

- Advertisement -

இதனால் நாடு முழுவதும் பூகம்பம் போல் இந்த போராட்டம் வெடித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் அவர்கள் தான் பிரிட்டன் செல்லும் விமான டிக்கெட் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவு செய்து உள்ளார். அந்த டிக்கெட்டில் அவருடைய முழுபெயர் இடம் பெற்று உள்ளது. அது அல்லா ரக்கா ரஹ்மான் என்பது தான் அவருடைய முழுப்பெயர். அதோடு முதல் முறையாக ஏ ஆர் ரகுமான் அவர்கள் இப்படி தன்னுடைய முழு பெயரை தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஏ ஆர் ரகுமான் அவர்கள் இப்படி தன்னுடைய முழு பெயரை பதிவிட்டதன் மூலம் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டத்திற்கு மறைமுகமாக போராடுகிறார் என்று கூறுகிறார்கள்.

அதுமட்டும் இல்லாமல் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாணவர்களின் போராட்டதிற்கு மறைமுகமாக ஏ ஆர் ரகுமான் ஆதரவு தருகிறார் என்று பலர் கூறி வருகிறார்கள். இதை தொடர்ந்து குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாணவர்களின் போராட்டதிற்கு மறைமுகமாக ஏ ஆர் ரகுமான் பதிவிட்ட கருத்துக்கு பலரும் ஆதரவாகவும், எதிராகவும் பதில் அளித்து வருகிறார்கள். மேலும், இவர் சமூகப் பிரச்சினைகள் பல விஷயங்களுக்கு மறைமுகமாக ஆதரவு அளித்து உள்ளார். ஏன் இப்படி மறைமுகமாக ஆதரவு தெரிவிக்க வேண்டும். நேரடியாகவே தெரிவிக்கலாம் என்றும் விமர்சித்தும் வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement