மாஸ், டான்ஸ், பன்ச் எல்லாம் போதும். விஜய் 65வில் ரூட்டை மாற்றும் தளபதி. இது புது கூட்டணி.

0
25695
vijay 65

தமிழ் சினிமா உலகில் வசூல் மன்னனாக பட்டையை கிளப்பிக் கொண்டிருப்பவர் தளபதி விஜய். சமீபத்தில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகி உள்ள “பிகில்” படம் திரையரங்குகளில் தூள் கிளப்பியது. இதனை தொடர்ந்து தளபதி விஜய்யின் அடுத்த படமான “தளபதி 64” படத்தின் பட வேலைகள் மும்முரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. மேலும், மாநகரம், கைதி போன்ற படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அவர்கள் தான் விஜயை வைத்து “தளபதி 64” படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.

Image result for vijay 65

- Advertisement -

இவர்களுடன் இந்த படத்தில் சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், கெளரி ப்ரேம், சேத்தன், அழகம் பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல முக்கியமான நடிகர்கள் நடித்து வருகின்றனர். விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைத்து வருகிறார். மேலும், இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரிக்க உள்ளார்கள். அதோடு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் தான் சென்னையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு பார்வையற்றோர் பள்ளியில் நடந்தது. இங்கு படப்பிடிப்பு நடந்த போது ஏற்பட்ட பல சர்ச்சைகள் அனைவருக்கும் தெரிந்ததே.

இதையும் பாருங்க : அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது. பற்றி எரியும் பிரச்சனை குறித்து கார்த்திக் சுப்புராஜ் போட்ட ட்வீட்.

இதனை தொடர்ந்து விஜய் படத்தின் படப்பிடிப்பு கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஷிவமோகாவில் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் விஜய் அவர்கள் இயக்குனர் வெற்றிமாறனுடன் சேர்ந்து ஒரு படம் பண்ணப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், “தளபதி 65” படத்தை இயக்குனர் வெற்றிமாறன் தான் இயக்கப் போகிறார் என்று விஜய்க்கு நெருக்கமான நண்பர் ஒருவர் தெரிவித்து உள்ளார். வெற்றிமாறன் படம் என்றாலே அனைவருக்கும் தெரியும். அவருடைய ஸ்டைலும், விஜய்யோட செயலும் வேற வேற. எப்படி இவர்கள் உடைய கூட்டணி வெற்றிபெறும் என்று பல விமர்சனங்களை எழுதி வருகிறார்கள். அதுவும் விஜய் அவர்கள் எப்போதும் மாஸ் பஞ்ச் வசனமும், வில்லன்களை பந்தாடுவது, டான்ஸ் கில்லி என்று ஒரு ட்ராக்கில் போய் கொண்டு உள்ளவர். ஒரு வேலை ஒரே மாதிரி டிராக்கில் போய்க் கொண்டிருப்பது கூடாது என்பதற்காகத் தான் வெற்றிமாறனுடன் இணைந்து படம் வித்தியாசமாக நடிக்கலாம் என்று விஜய் முடிவு செய்திருக்கலாம் என்று பல கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
Image result for vijay vetrimaran

ஆடுகளம், பொல்லாதவன், வடசென்னை, அசுரன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தனுஷுடன் இணைந்து கொடுத்தவர் வெற்றிமாறன். தனுஷ்– வெற்றிமாறன் கூட்டணி மிகப் பெரிய அளவு ரசிகர் மத்தியில் வரவேற்பு கொடுத்து இருக்கிற நிலையில் விஜய்– வெற்றிமாறன் கூட்டணி வெற்றி பெறுமா?? அதோடு இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அதிக வாய்ப்பிருக்கலாம் எனவும் கூறுகிறார்கள். இந்த படம் 2020 ஆம் வருடம், ‘தளபதி 64’ படத்தின் ரிலீசுக்கு பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் துவங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement