வெளிநாட்டில் ஓவியா – ஆரவ் இன்ப சுற்றலா.! வீடியோ எடுத்த நபரை மிரட்டும் ஆரவ்.! வைரலாகும் வீடியோ

0
4478
- Advertisement -

விஜய் டிவியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி யாருக்கு பெரும் புகழையும் சம்பாதித்து தந்ததோ இல்லையோ, ஆரவிற்கும், நடிகை ஓவியாவிற்கும் பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது. சொல்லப்போனால் ஆராவ், ஓவியாவை வைத்து தான் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார் என்றும் கூறலாம்.

-விளம்பரம்-

Aarav

- Advertisement -

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் மற்றும் ஓவியா ஜோடி தான் பிக் பாஸ் வீட்டின் லைம் லைட்டாக இருந்து வந்தனர். அதிலும் குறிப்பாக நடிகை ஓவியாவுக்கு அவரது உண்மையான குணத்திற்காக பல ரசிகர்கள் அவருக்கு சமூக வலைத்தளங்களில் ஓவியா ஆர்மியை கூட தொடங்கினர். மேலும் ஓவியா மற்றும் ஆரவ் காதலிப்பதாகவும் பல தகவல்கள் வெளியாகின

இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்று நினைத்திருந்த நிலையில் ,சமீபத்தில் நடிகை ஓவியா மற்றும் ஆரவ் ஒன்றாக ஊர் சுற்றும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்த புகைப்படத்தை பார்த்த அனைத்து ரசிகர்களும் தற்போது ஓவியா மற்றும் ஆரவவிற்கும் உண்டான காதலை ஊர்ஜிதபடுத்தினர். இந்த தகவல் ஓவியா அர்மியில் இருக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிடியாக அமைந்தது.

-விளம்பரம்-

இந்நிலையில் சமீபத்தில் ஓவியா மற்றும் ஆராவ் ஒன்றாக ஊர்சூத்திய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் இவர்கள் இருவரையும் ஒன்றாக பார்த்த ரசிகர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுக்க முயன்ற போது , அவரை ஆரவ் கை நீட்டி வேண்டாம் வேண்டாம் என்று மிரட்டும் பாணியில் பேசுவது போல தெரிகிறது. இதோ அந்த வீடியோ பதிவு.

Advertisement