ஆருத்ரா மோசடி வழக்கு, டிமிக்கு கொடுத்த வந்த Rk சுரேஷ்ஷுக்கு பொருளாதார குற்றப்பிரிவு வைத்த செக்.

0
414
- Advertisement -

ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவனம் மோசடி தொடர்பாக நடிகர் ஆர் கே சுரேஷின் வங்கி கணக்குகள் மூடுக்கப்பட்டிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழில் மிக பிரபலமான நடிகர், தயாரிப்பாளராக இருப்பவர் ஆர்கே சுரேஷ். இந்த நிலையில் நடிகர் ஆர்.கே. சுரேஷ் மீது கோல்டு நிறுவன மோசடி வழக்கு தொடரப்பட்டு இருக்கும் தகவல் கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, சென்னை அமைந்த கரைப்பகுதியில் ஆருத்ரா கோல்ட் நிறுவனம் செயல்பட்டு வந்தது.

-விளம்பரம்-

இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் முதல் தருவதாக நிறுவனம் அறிவித்திருந்தார்கள். இதனை நம்பி லட்சக்கணக்கான மக்கள் முதலீடு செய்திருந்தனர். ஆனால், முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை அந்த நிறுவனம் திருப்பி கொடுக்கவில்லை. அதோடு இந்த நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து 2438 கோடி முதலீடாக பெற்றிருக்கிறது. இந்த நிலையில் இந்த நிறுவனம் பண மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்து இருக்கிறார்கள் பொது மக்கள். இதனை அடுத்து போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

- Advertisement -

மேலும், இந்த வழக்கை விசாரிக்க கூடுதல் தனிப்படை போலீசாரும் அமைத்திருக்கிறார்கள். முதல் கட்ட நடவடிக்கையாக அந்த நிறுவனத்தின் சொத்துக்கள் எல்லாம் முடக்கப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் மேலான் இயக்குனர்கள் ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜேஷ் ஆகியோர் வெளிநாடு தப்பி தலைமறைவாகி இருக்கின்றனர். இவர்களை தொடர்ந்து இயக்குனரும், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி ஆன ஹரிஷ் மற்றும் மற்றொரு இயக்குனர் மாலதி, ரூசோ ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து இருக்கிறார்கள்.

பின் போலீசார் இவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது நடிகரும் பாஜக கலை பிரிவு மாநில நிர்வாகியான ஆர் கே சுரேஷ் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்திருக்கின்றது. அதோடு இவர்களது வாக்குமூலத்தின் பெயரில் இது வரை 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரபல பிரபல இயக்குனரான பாஸ்கர், செந்தில் குமார், பிரபல மோகன் பாபு உள்ளிட்டோரும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து போலீஸ் ஆர்கே சுரேஷின் செல்போனை தொடர்பு கொள்ள முயற்சி செய்திருக்கின்றனர்.

-விளம்பரம்-

ஆனால், சுட்ச் ஆஃப் செய்துவிட்டார் எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. அதோடு ஆர்கே சுரேஷ் துபாய் தப்பி சென்றிருப்பது தெரிய வந்து இருக்கிறது. இதனை அடுத்து போலீசார் ஆர்கே சுரேஷை ஆஜராகும்படி சமன் அனுப்பிருந்தது. ஆனால், அந்த சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்று ஆர் கே சுரேஷ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். ஆனால், கோர்ட் ஆர் கே சுரேஷ் கொடுத்த மனுவை ரத்து செய்து இருக்கிறது.

அதோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சார்பில் அனைத்து விமான நிலையங்களுக்கும் ஆர் கே சுரேஷ் மீது லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தங்களுடைய விசாரணை அடிப்படையில் ஆர் கே சுரேஷ் உடைய வங்கி கணக்கு அனைத்தையும் முடக்கி இருக்கிறார்கள். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இதனை அடுத்து ஆர் கே சுரேஷ் இந்தியாவிற்கு வருவாரா? போலீஸ் அவரை கைது செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement