இதனால் தான் ரஞ்சித்தையும் மாரி செல்வராஜையும் இப்படி பண்றாங்க – அமீர் அளித்த பேட்டி.

0
1633
- Advertisement -

திரைப்படங்கள் தான் இந்த சமூகம் பயன்படுத்தி வருகிறது.சினிமாக்கள் இல்லையென்றால் வேறு மாதிரியான சூழலை உருவாக்கிவிடும் என்று இயக்குனர் அமீர் கருத்து தெரிவித்து இருந்தார்.  கடந்த சில தினங்களாக தமிழகத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருவது நாங்குநேரி சம்பவம் தான். ஜாதி வெறியால் மாணவன் ஒருவர் வெட்டப்படட்ட சம்பவம் தமிழ் நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் பிரமுகர்களும் சினிமா பிரபலங்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில் இந்த சம்பவம் குறித்து பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அமீர் கருத்து:

நாங்குநேரி சம்பவம் குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து கொண்டு வருகிறது. ஆனால் இது எல்லாம் நிரந்தர தீர்வாக இருக்காது. சட்டங்கள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும் என்றும் அவர் கூறினார். “18வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் வாகங்களை ஓட்டினால் அவர்களின் பெற்றோர்களை தண்டிப்பது போல இது போன்ற வன்முறைகளில் ஈடுபடும் சிறுவர்களின் பெற்றோர்களையும் தண்டித்தால் தான் இது போன்ற குற்றங்கள் குறையும்.

குடிபெருமை, மொழிப்பெருமை, இனப்பெருமை, மதப்பெருமை என்று எதுவும் தேவையில்லை என்று நினைக்கிறேன். நீங்கள் எதுவாக வேண்டுமாலும் இருங்கள் ஆனால் எதையும் பெருமை படுத்த வேண்டாம், யாரையும் சிறுமைப்படுத்த நினைக்க வேண்டாம்” என்று கூறினார்.            

-விளம்பரம்-

சாதிய படங்கள் மூலமாக தான் இது போன்ற வன்முறைகள் நடக்கிறது என்று கூறுகிறார்களே என செய்தியாளர் கேள்வி கேட்டார்  அதற்க்கு அவர் அவர்கள் தனது சுயலாபத்திற்காக அது போன்று கூறிவருகின்றார்கள். திரைப்படங்களை தான் இந்த சமூகங்கள் பயன்படுத்தி கொண்டுள்ளது.சினிமா இல்லாவிட்டால் வேறு மாதிரியான சூழ்நிலைகள் தான் உருவாகி இருக்கும். திரைப்படங்கள் மூலமாகதான் விவாதத்தை ஏற்படுத்த முடியும். அது போன்ற விவாதங்கள் தான் புதிய அரசியலை உருவாக்க வழி வகுக்கும் என்றும் அவர் கூறினார்.

தமிழகத்தில் தற்போது ஆட்சியில் இருக்கும் ஆட்சியில் இருந்த திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் திரைப்படங்கள் மூலமாகதான் தமிழகத்தில் வளர்ந்தது. எனவே திரைப்படங்களை குறை சொல்வது தவறு. கிராம பகுதிகளில் இது போன்ற கட்டமைப்புகள் இருந்து வருகிறது. நகரத்தில் அது இல்லை என்று சொல்ல முடியாது நகரத்தில் அவர்களது உள்ளத்தில் இருக்கிறது. இதில் மாரி செல்வராஜ் மற்றும் பா. ரஞ்சித் ஆகியோரை காழ்ப்புணர்ச்சிக்காக அவர்களை தாக்கி வருகின்றனர்.            

Advertisement