ஆசை ஆசையாய் பட நடிகை என்னவானார் – அவரின் தற்போதைய நிலை என்ன ?

0
2470
meenakshi
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடித்த எத்தனையோ நடிகைகள் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்ற எந்த தகவலும் இல்லை அந்த வகையில் ஜீவா நடிப்பில் வெளியான ஆசை ஆசையாய் படத்தில் நடித்த நடிகை ஷர்மிலியும் ஒருவர். நடிகை மீனாட்சி கேரளாவின் கோழிக்கோட்டை சேர்ந்தவர். ஆனால் சென்னையில் பிறந்த இவருடைய உண்மையான பெயர் மரியா மார்கரெட் ஷார்மிலி ஆகும். சென்னையில் உள்ள ஒரு பிரபல பள்ளியில் படித்துவிட்டு அங்குள்ள ஒரு கல்லூரியில் டிகிரி முடித்தார்.

-விளம்பரம்-

இவருக்கு பள்ளியில் படிக்கும் போதே பட வாய்ப்புகள் வந்தது. ஆனால் படிப்பில் கவனம் செலுத்த வேண்டி பட வாய்ப்புகளை துறந்துவிட்டார். அதன்பின்னர் கல்லூரி முடித்த கையோடு ஜெயா டிவியில் ‘காசுமேல’ என்ற ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கினார். இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் மீண்டும் வந்தது.

- Advertisement -

2002ஆம் ஆண்டு ஆசை ஆசையாய் என்ற தமிழ் படத்தில் அறிமுகம் ஆனார். தமிழில், 1.அன்பே அன்பே, 2.திவான், 3.பேசுவோமா ஆகிய படங்களில் நடித்தார். இறுதயாக மலையாளத்தில் 2005 ஆம் ஆண்டு வரை நடித்து வந்த இவர், அதன்பின்னர் ஒரு தெலுங்கு படத்திலும் பல மலையாள படத்திலும் நடித்தார்.

அதன்பின்னர் திரையில் இருந்து மங்கி போனார் மீனாட்சி. பட வாய்ப்புகளும் குறைந்தது. தற்போது என்ன செய்து வருகிறார் என்ற தகவலும் இல்லை. அதன் பின்னர் என்னவானார் எங்கு இருக்கிறார் என்பதே தெரியவில்லை.

-விளம்பரம்-
Advertisement