தன்னுடைய சொந்த மகனுக்கு நடிகர் அப்பாஸ் டி என் ஏ பரிசோதனை செய்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என்ற அந்தஸ்துடன் பல நடிகர்கள் இருந்து இருக்கிறார்கள். பிரசாந்த் துவங்கி மாதவன் வரை பல்வேறு நடிகர்கள் சாக்லேட் பாய் என்ற அந்தஸ்துடன் கொடிகட்டி பறந்தவர்கள். அந்த வகையில் நடிகர் அப்பாஸும் ஒருவர். தமிழ் சினிமாவில் வெள்ளை ஹீரோக்கள் அறிமுகமான காலத்தில் பல பெண்கள் மத்தியில் கனவுக் கண்ணனாக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ்.
இவர் 1996 ஆம் ஆண்டு ‘காதல் தேசம்’என்ற படத்தின் மூலம் தான் தமிழில் அறிமுகம் ஆனார். முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தது. இன்றும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு தான் இருக்கிறது. மேலும், இவர் சிறு வயதில் இருந்தே ஹிந்தி மற்றும் பெங்காலி படங்களை பார்த்து வளர்ந்துள்ளார். பின் இவர் தனது கல்லூரி காலங்களில் இருந்தே மாடலிங் செய்து வந்தார். அப்போது தான் இயக்குனர் கதிர் தனது கதைக்காக புதுமுக நடிகரை தேடி வந்தார்.
அப்பாஸ் திரைப்பயணம்:
முதல் படத்தின் வெற்றி தொடர்ந்து, விஜய் மற்றும் அஜித்துக்கு போட்டியாக இவர் வருவார் என பலர் கனவு கண்டார்கள். அதன்பின்னர் இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், என பல மொழிகளில் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்தார். இதனிடையே இவருக்கும் எராம் அலி என்னும் பேஷன் டிசைனருக்கும் கடந்த 2001ஆம் ஆண்டு அப்பாஸ் திருமணம் ஆனது. இந்த தம்பதிக்கு எமிரா, அய்மான் என இரண்டு குழந்தைகள் உள்ளது.
அப்பாஸ் குறித்த தகவல்:
அதன் பின்னரும் சினிமா, டீவி சீரியல்களிலும், விளம்பர படங்களிலும் அப்பாஸ் நடித்து வந்தார். இறுதியாக இவர் 2011 ஆம் ஆண்டு ‘கோ’ படத்தில் ஒரு பாடலில் மட்டும் தோன்றி இருந்தார். அதன் பின்னர் இவரை எந்த படத்திலும் காண முடியவில்லை. நீண்ட இடைவெளிக்கு பின் இவர் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர் வாய்ப்புகள் கிடைக்காததனால் தான் சினிமாவில் இருந்து விலகி விட்டதாக கூறி இருந்தார். பின் இவர் நியூசிலாந்தில் செட்டில் ஆக்கி இருப்பதாக கூறி இருந்தார். இதை பார்த்து பலரும் சினிமாவில் அப்பாஸை நடிக்க சொல்லி கேட்டு வருகிறார்கள்.
அப்பாஸ் பேட்டி:
பின் சமீபத்தில் அப்பாஸ் அவர்கள் தமிழ்நாடு வந்திருக்கிறார். இதனால் இவர் மீண்டும் சினிமாவில் நடிக்கப் போவதாக தகவல் வெளிவந்தது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இந்த நிலையில் தன் மகன் குறித்து அப்பாஸ் கொடுத்திருந்த பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், என்னுடைய மூத்த மகன் ரொம்ப அமைதியாக இருப்பார். ஆனால், அவனுடைய வயதில் நான் ரொம்ப கலாட்டா, கூத்தெல்லாம் பண்ணுவேன்.
தன் மகன் குறித்து சொன்னது:
என்னுடைய மகன் அப்படி எல்லாம் இல்லை. ரொம்ப அமைதியாக, சிம்பிள், மெச்சூரிட்டியாக இருந்தான். தொல்லையே கொடுக்கவில்லை. இது எனக்கு ரொம்ப ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனால் ஒரு கட்டத்தில் இவன் என்னுடைய மகனா? என்ற சந்தேகம் எனக்கு வந்தது. அதன் பிறகு நான் டிஎன்ஏ செக் பண்ணினேன். அப்போது அவன் என் பையன் தான் என்று தெரிந்தது என வேடிக்கையாக கூறியிருந்தார்.