தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக விளங்கி வருகிறார் தளபதி விஜய். இவருக்கு இருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. இவருக்காக உயிர் கொடுக்கும் பல ரசிகர்கள் இருக்கின்றனர். இந்தநிலையில் ரசிகர்களுக்காக ஓடிச்சென்று சென்று உதவிய விஜயின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
சர்க்கார் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அட்லி இயக்கத்தில் தனது 63 ஆவது படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.மேலும், விவேக் ,டேனியல் பாலாஜி ,கதிர் ,ஆனந்தராஜ் போன்ற பல்வேறு முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்க : விஜய் 63 எப்படி இருக்கும்.! முதல் முறையாக பேசிய விஜய்.! ஸ்வாரஸ்ய தகவல் இதோ.!
படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு ரசிகர் கூட்டம் குவிந்து வருகின்றனர். மேலும், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களும் வீடியோக்களும் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜயை சந்திக்க ஏராளமான ரசிகர்கள் கூட்டம் திரண்டனர். அப்போது அவர்களுக்கு கையசைத்தபடி நடிகர் விஜய் நடந்து வந்தபோது ரசிகர்கள் நின்றுகொண்டிருந்த தடுப்பு வேலி திடீரென்று சரிந்தது. இதனை கண்ட விஜய் பதறிப்போய் முதல் நாளாக அந்த தடுப்பை தாங்கி பிடித்தார். பின்னர் விஜய் உடன் இருந்த சிலரும் தடுப்பு வேலி தாங்கிப் பிடித்தனர் தற்போது இந்த வீடியோ சமூக வளையதலத்தில் வைரலாக பரவி வருகிறது.