நடந்த அசவுகிரியங்களுக்கு ரஹ்மான் சார தாக்காதீங்க எல்லாத்துக்கும் நாங்களே பொறுப்பேற்கிறோம் – ACTC விளக்கம்.

0
868
- Advertisement -

ஏ ஆர் ரகுமான் இசை கச்சேரியில் ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம் குறித்து ஏசிடிசி ஹேமந்த் வெளியிட்டிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் ஏ ஆர் ரகுமானின் இசை கச்சேரி குறித்த சர்ச்சை தான் பூதாகரம்பாக வெடித்து கொண்டு வருகிறது. உலக அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இவர் தன்னுடைய துள்ளல் இசையால் இளைஞர்களை கவர்ந்தவர். இவர் குறுகிய காலத்திலேயே பாலிவுட், ஹாலிவுட், கோலிவுட் என எல்லா மொழி படங்களிலும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

தற்போது இவர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் லால் சலாம், அயலான், ஜீனி, கமல் ஹாசன் 234, சங்கமித்ரா, துருவ் விக்ரம் நடிக்கும் படம் போன்ற பல படங்களில் கமிட்டாகி பிசியாக இசை அமைத்து வருகிறார். மேலும், இவர் படங்களைத் தாண்டி பல நாடுகளில் இசைக் கச்சேரிகளை நடத்தி இருக்கிறார். அதோடு இவர் நிகழ்ச்சி என்றாலே டிக்கெட் சில நிமிடங்களில் விற்பனையாகி விடும். இது அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிலையில் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற பெயரில் ஏ ஆர் ரகுமான் இசை கச்சேரி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல நகரங்களிலும் நடைபெற திட்டமிட்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

ஏ.ஆர்.ரகுமான் இசை கச்சேரி:

அதோடு வெளிநாடுகளிலும் இந்த இசை கச்சேரி நடக்க இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. மேலும், சென்னை பனையூரில் ஏ ஆர் ரகுமான் இசைக் கச்சேரி நடக்க இருந்தது. ஆனால், திடீர் மழை பெய்து நிகழ்ச்சி நடத்தும் இடத்தில் நீர் தேங்கி இருந்தது. இதனால் இசை கச்சேரி ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் எல்லோரும் சோகத்தில் இருந்தார்கள். மேலும், இது தொடர்பாக ஏ.ஆர் ரஹ்மானும் சமூக வலைத்தளங்களில் மன்னிக்கவும் கேட்டிருந்தார். தற்போது அந்த இசை கச்சேரி ஞாயிற்று கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நடந்த சம்பவம்:

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியால் சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்கள் அவதிப்பட்டனர். டிக்கெட் வாங்கியும் ஆயிரக்கணக்கானோர் மக்கள் அவதிப்பட்டனர். பார்க்க முடியாத அளவுக்கு நிகழ்ச்சி ஏற்பாடு மோசமாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், 10000 ரூபாய் டிக்கெட் வாங்கி தங்களால் உள்ளே கூட செல்லவில்லை என்று பலரும் புலம்பி இருக்கின்றனர். மேலும், ஏ ஆர் ரகுமான் மிகப்பெரிய ஸ்கேம் செய்துவிட்டார். அவர் மோசடி மன்னன் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் அவரை விமர்சித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

ஏசிடிசி ஹேமந்த் வீடியோ:

அதோடு இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் தான் இவ்வளவு பிரச்சனைக்கு காரணம் என்று பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏ சி டி சி இயக்குனர் ஹேமந்த் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், செப்டம்பர் 10ஆம் தேதி ஏ ஆர் ரகுமான் இசை கச்சேரியை ஏற்பாடு செய்தது நாங்கள் தான். இந்த நிகழ்ச்சிக்கு வந்த அனைத்து ரசிகர்களுக்கும் ரொம்ப நன்றி. நிகழ்ச்சியை சிறப்பாக அமைத்துக் கொடுத்த ஏ ஆர் ரகுமானுக்கும் நன்றி. இந்த நிகழ்ச்சியில் நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கிறது. டிக்கெட் வாங்கிய நிகழ்ச்சி உள்ளே வர முடியாமல் இருந்த பல பேருக்கு பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. அவர்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

மன்னிப்பு கேட்ட ஏசிடிசி ஹேமந்த் :

அந்த டிக்கெட்டுக்கு உண்டான பணத்தை நாங்கள் திரும்பத் தருகிறோம். ஏ ஆர் ரகுமான் இசை கச்சேரி மக்கள் மகிழ்ச்சியாக பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் இதை ஏற்பாடு செய்தோம். ஆனால், கூட்டம் நெரிசல் காரணமாக டிக்கெட் வாங்கியும் உள்ளே வர முடியாமல் நிறைய பேர் தவித்து இருக்கிறார்கள். இந்த அனைத்து பிரச்சனைக்கும் நான் பொறுப்பு எடுத்துக் கொள்கிறேன். ஏ ஆர் ரகுமான் நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்தி கொடுத்தார். இரண்டு நாட்களாக அவரை தாக்கி பலருமே சோசியல் மீடியாவில் விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்த எல்லா பிரச்சனைக்கும் ஏ ஆர் ரகுமானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால் அவரை தயவு செய்து திட்டாதீர்கள். இதற்கு முழுக்க முழுக்க காரணம் நாங்கள் தான். டிக்கெட் ஆல் மட்டும் தான் இந்த கூட்டம் நெரிசல் ஏற்பட்டது. நாங்கள் அதிகமாக டிக்கெட் விற்பனை செய்யவில்லை. எல்லாம் ஏற்பாடுமே சரியாக தான் நடந்தது என்று கூறியிருக்கிறார்.

Advertisement