கல்வித்துறை அதிகாரிகளின் வாகனத்தை மடக்கி தாக்கிய மாணவிகள் – பின்னணி என்ன ?

0
1222
- Advertisement -

பீகார் மாநிலத்தில் அரசு பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் பள்ளியில் அடிப்படை வசதிகள் இதை கண்டித்து கல்வித்துறை அதிகாரிகளின் வாகனத்தை அடித்து நொறுக்கும் வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அந்த அரசு பள்ளி சார்ந்த நூற்றுக்கணக்கான மாணவிகள் தங்கள் பள்ளியில் போதிய அடிப்படை வசதி இல்லாததை கண்டித்தும் சாலை மறியலில் ஈடுபட்டனர் அப்பொழுது கல்வித்துறை அதிகாரிகள் வாகனத்தை  கையில் கிடைத்த கற்கள் கட்டைகளை வைத்து தாக்கி  அடித்து நொறுக்கினர்.

-விளம்பரம்-

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தை சேர்ந்த மஹ்னார் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்ததுள்ளது. அங்குள்ள அரசு பள்ளிகள் ஒன்றில் அடிப்படைவசதிகள் உட்பட பல அடிப்படை வசதிகள் இல்லாததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் சில போராட்டத்தில் ஈடுபட்டனர் தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு வந்த நிலையில் நிலைமையை கட்டுக்குள்  கொண்டு வர முயற்சி செய்தனர்.

- Advertisement -

ஆனாலும் காவல்துறை அதிகாரி வரும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளை சிலரை அறைந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அங்கிருந்த பெண்கள் அதிகாரிகளின் வாகனத்தின் மீது செங்கல் கற்கள்  மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வீசி அவர்களது ஆத்திரத்தை வெளிப்படுத்தி வந்தனர் இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இதைகுறித்து மஹ்னார் துணை பிரிவு அதிகாரி நீரஜ் குமார் கூறுகையில்,

துணை பிரிவு அதிகாரி நீரஜ் குமார்

பள்ளி வகுப்பறை கொள்ளளவை விட மாணவர் சேர்க்கை அதிகமாக இருந்து வருகிறது. இதனால் மாணவர்கள் அங்கு அமர  இடம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  இதனால்தான் பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்களது ஆத்திரத்தை இவ்வாறு காட்டுவதற்காக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் பள்ளியை இரண்டு சுழற்சி முறையில் நடத்தும் திட்டமிட்டு வருகின்றனர். இது குறித்து விசாரணை நடத்துவதாகவும் உறுதிகளுக்கு பின்னர் அவர்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.

-விளம்பரம்-

மாணவர்கள் கூறியது:

“நாங்கள் அமைதியான முறையிலேயே இந்த போராட்டம் நடத்திவந்தோம். ஆனால் அங்கு இருந்த ஒரு பெண் காவல்துறை அதிகாரி எங்களைத் தாக்கியதால்தான் நாங்களும் பதிலுக்கு தாக்கினோம்” எனத் மாணவர்கள் தரப்பு தெரிவித்தனர்.  இதற்கிடையில், தள்ளுமுள்ளுக்கு ஆளான பெண் அதிகாரியின் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Advertisement