இந்த காரணத்தால்தான் ஸ்ரீதேவி கணவர் தயாரிப்பில் நடிக்க ஒத்துக்கிட்டேன் ! அஜித் நெகிழ்ச்சி

0
2903
Actor ajith

நடிகை ஸ்ரீதேவியின் 16 ஆம் நாள் துக்க அணுசரிப்பு கூட்டம் 3 நாட்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்றது.அந்த கூட்டத்தில் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர் ஆனால் அஜித் அனைவர்க்கும் முன்பாகவே தனது மனைவி ஷாலினியுடம் சென்று ஸ்ரீதேவி கணவர் போனி கப்பூருக்கு ஆறுதல் தெரிவித்துவந்தார்.

actor ajithkumar

ஏனெனில் நடிகர் அஜித் மற்றம் ஸ்ரீதேவி மிகவும் நெருங்கிய நண்பர்கலாம் நடிகை ஸ்ரீதேவி கேட்டுக்கொண்டதால் தான் அஜித் ஸ்ரீதேவி நடித்த இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் நடித்துள்ளார். இந்தநிலையில் நடிகர் அஜித் நடிக்கப்போகும் படத்தை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்க உள்ளார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.

பொதுவாக அஜித் எந்த ஒரு தயரிப்பாளர்களுக்கும் எந்த ஒரு கால்ஷிடையும் எளிதாக தருவதில்லை, ஆனால் தற்போது விசுவாசம் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் அஜித் அந்த படம் வருவதற்கு முன்பாகவே மற்றொரு படத்திற்கு கால்ஷிட் கொடுத்ததற்கு காரணம் அஜித் அவர்கள் ஸ்ரீதேவி குடும்பத்திற்கு நெருங்கிய நண்பர் என்பதாலும் மேலும் தற்போது ஸ்ரீதேவி குடும்பம் கொஞ்சம் பண நெருக்கடியில் இருப்பதாலும் அஜித் இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் என்று தகவல்கள் வந்துள்ளது.எப்போதுமே பிறருக்கு உதவிகள் செய்வதை வழக்கமாக வைத்துள்ள நடிகர் அஜித்.தற்போது இந்த செயலுக்கு பின்னர் தனது நல்ல குணத்தை மேலும் காட்டியுள்ளார்.