மாதம் 1 கோடி ரூபாய் சம்பாதிக்கிறாரா விமர்சகர் பிரசாத். இப்படி ஒரு காரை வாங்க போகிறாரா ?

0
6422
prasath

தற்போது உள்ள காலகட்டத்தில் எந்த ஒரு விஷயத்தையம்,நிகழ்வுகளையும் தெரிந்து கொள்வதற்கு அதிகமாக உதவுவது சமூக வலைத்தளம் தான். அப்படி சமூக வலைத்தளங்களினால் பல்வேறு நபர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள். அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் பிரபலமானர் என்று சொன்னால் படங்களை விமர்ச்சிக்கும் “பிரசாந்த் ரங்கசாமி”தான். இது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம். பிரசாந்த் ரங்கசாமி என்பவர் கோயம்புத்தூரில் பிறந்தவர். இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். மேலும், சமூக வலைத்தளங்களில் ஒன்றான யூடூப் சேனலில் திரைக்கு வெளிவருவதற்கு முன்னரே படங்களை குறித்து கருத்துக்களை சொல்வதில் பிரசாந்த் ரங்கசாமி வல்லவர்.

இதனால் பிரசாந்த் ரங்கசாமிக்கு யூடியூபில் ஏறத்தாழ 5 லட்சத்துக்கும் மேல் சப்ஸ்கிரைப்பர்ஸ் உள்ளார்கள். அது மட்டுமில்லாமல் டுவிட்டரில் இவர் அக்கவுண்டுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளார்கள். இவர் சமூக வலைத்தளங்களில் நிறைய நன்மை பயக்கும் விஷயங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார். மேலும், அதில் குழந்தைகளுக்கு உடல் நலம் சம்பந்தமாக பல நல்ல கருத்துக்களை பதிவிட்டுள்ளார். தற்போது அவர் வோல்ஸ்வேகன்(Volkswagen) இந்தியா என்ற பிரபலமான காரை பற்றிய கருத்துக்களை இணையங்களில் வெளியிட்டுள்ளார். மேலும், இந்தியா பிரபலமான வாகனத்தை Tiguan மூலம் வெளியிட உள்ளார்கள் என்றும்,அந்த கார் 28 லட்சதுக்கு மேல் மதிப்பு இருக்கும் என்று கூறியிருந்தார். இதனைத்தொடர்ந்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கார் குறித்து சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அது, இந்த கார் பயணிகளுக்கு நல்ல பாதுகாப்பும், உறுதியானதும் இருக்கும் என்று கூறியுள்ளார்.

இதையும் பாருங்க : இரண்டாம் குழந்தைக்கு தயாரான ரேஷ்மி. சிம்பிளாக நடந்த சீமந்தத்தின் புகைப்படங்கள் இதோ.

- Advertisement -

இந்நிலையில் இவருடைய ரசிகர் ஒருவர் ட்விட்டரில் பிரபல படம் விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி அவர்கள் மாதம் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்று பதிவிட்டிருந்தார். அதுவும் அந்த மீம்ஸ்சை நடிகர் சூரி மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும்சேர்ந்து நடித்த “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படத்தில் இருந்து எடுக்கப்பட்ட காட்சியில் வைத்து பதிவிட்டுள்ளார். இதை ட்விட்டை பிரசாந்த் அவர்கள் பார்த்துவிட்டு பயங்கரமாக சிரித்தார். மேலும்,அவர் கூறியது, “நீங்க சொன்ன மாதிரி சம்பளம் வந்தா நான் ரொம்ப சந்தோசம் படுவேன் ப்ரோ” என்றும் அதுமட்டுமில்லாமல் இந்த மாதிரி பணம் வந்தால் “நான் இப்பவே வோல்டு டூர் போறத்துக்கு ஸ்டார்ட் பண்ணி விடுவேன்” என்றும் கூறியிருந்தார். பிரசாந்த் தன்னுடைய கேரியரில் முதன் முதலில் அவர் McAfee ஏஜென்டாக தான் வேலைக்கு சேர்ந்தார்.

பின்னர் அவர் பல துறைகளில் வேலை செய்தார். அதுல சீனியர் டெக் சப்போர்ட் மற்றும் லெவல் 2 டெக்னிக்கல், ரிமோட் சப்போர்ட் என பல வேலைகளை செய்து வந்தார். அதுக்கு பின்னர் தான் சமூக வலைத்தளங்களில் திரைக்கு வரும் படங்களை குறித்து கருத்துக்களை சொல்லும் வேலை செய்து வருகிறார். மேலும்,பிரசாந்த் அவர்கள் கூறும் படங்கள் குறித்த கருத்துக்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அவர் அந்த அளவிற்கு எந்த ஒரு பொய்யான தகவலையும் கூறாததினால் தான் இவருக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. பிரசாந்த் அவர்கள் மூவி ரிவியூ மட்டுமல்லாமல் சினிமா துறையில் பிரபலமான நடிகர்களை கூட இன்டர்வியூ செய்து வருகிறார். அந்த அளவிற்கு கோலிவுட்டில் பிரபலமாகி வருகிறார் பிரசாந்த் ரங்கசாமி. தற்போது இவர் கோலிவுட்டில் பிரபலமானவர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement