தற்போது சோசியல் மீடியா முழுவதும் மிஸ்கினின் சர்ச்சை பேச்சு தான் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிகவும் வித்யாசமான படங்களை கொடுப்பதில் கை தேர்ந்தவர் மிஸ்கின். இவர் திரைப்பட இயக்குநர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். அது மட்டும் இல்லாமல் இவர் சமீபகாலமாக மேடைகளில் பேசுவது சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அந்த வகையில் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் பாட்டில் ராதா. இந்த படத்தை தினகரன் சிவகலிங்கம் இயக்கியிருக்கிறார்.
இந்த படத்தில் குரு சோமசுந்தரம் ஹீரோவாக நடித்திருக்கிறார். மேலும், இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழாவில் மிஸ்கின், மது அருந்துவது என்பது ஒரு நிலை. மன வருத்தம் அதிகமாக உள்ளவர்கள் குடிப்பார்கள். அதற்குப்பின் அமைதியாகி விடுவார்கள். இங்கு உள்ளவர்கள் பெரும் குடிகாரர்கள் தான். இயக்குனர் குரோசாவா எனக்கு மிகப்பெரிய போதை. அதைவிட இளையராஜா என்ற ஒருத்தன் இருக்கான். அவன் தான் எனக்கு மிகப்பெரிய போதை என்று ரொம்ப மோசமாக பேசி இருந்தார்.
மிஸ்கின் பேச்சு:
இப்படி கொஞ்சம் கூட மேடை நாகரீகம் இல்லாமல் மிஸ்கின் பேசி இருப்பது ரொம்ப தவறு என்று பலரும் அவருடைய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தும் விமர்சித்தும் வருகிறார்கள். அந்த வகையில் இது தொடர்பாக
பட விழாவில் ஒளிப்பதிவாளரும், நடிகருமான அருள்தாஸ் சொன்னது, சமீபத்தில் ஒரு பட விழாவில் இயக்குனர் மிஷ்கின் பேசியது ரொம்ப அநியாயமாக இருந்தது. அவ்வளவு வல்கரா பேசணும்னு அவசியம் கிடையாது. இயக்குனராக இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா? அந்த வீடியோவை நான் பார்த்தேன். தலைகுனிவாக இருந்தது.
அருள்தாஸ் பேட்டி:
தமிழ் சினிமா, இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோரும் இந்திய அளவில் மதிக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். ஆனால், மேடை நாகரீகம் இல்லாமல் மிஸ்கின் பேசியிருந்தார். மேடை நாகரீகம் என்ற ஒரு விஷயம் இருக்கிறது. அதனால் எது வேணும்னாலும் பேசிட முடியாது. உலக சினிமாக்கள், புத்தகங்கள் படித்திருப்பதாக சொல்கிறீர்கள். அப்படி இருக்கும்போது உங்களுக்கு என்ன அறிவு இருக்கிறது? மேடை நாகரிகம் என்பது ரொம்ப முக்கியம். தம்பி என்று கூப்பிடுவது பெரிய விஷயம் இல்லை. கூப்பிடுபவர்கள் நம்மை அண்ணனாக நினைக்க வேண்டும். அப்படி யாரு உங்களை அண்ணனாக நினைத்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை.
மிஷ்கினை கண்டித்த அருள்தாஸ்:
எல்லோரையும் சகட்டுக்கு மேனிக்கு வாடா போடா என்று சொல்கிறார். பாலாவை குடிகாரன் என்று சொல்வதும், இளையராஜாவை அவன் இவன் என்று சொல்வதும் ரொம்ப அநாகரிகமாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா? போலி அறிவாளி என்று தான் உன்னை சொல்லணும்.
உலக சினிமாவை காப்பி அடித்து ஜெயித்த போலி அறிவாளி தான் மிஸ்கின். அநாகரிகமாக ஒரு மேடையில் ஆணவத்துடன் பேசுவது மனது கஷ்டமாக இருக்கிறது. மிஸ்கின் பேசிய அந்த மேடைப்பேச்சு ரொம்ப அருவருக்கத்தக்கதாக இருந்தது என்று கூறி இருந்தார்.
அருள்தாஸ் விளக்கம்:
இந்த நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் அருள்தாஸ், தமிழ் சினிமா இந்திய சினிமாவுக்கு முன்னோடியாக இருக்கிறது. சபை நாகரிகம் வேண்டாமா? இவ்வளவு பெரிய இயக்குனர்கள் எல்லாம் வைத்துக் கொண்டு பேசினால் அவர்களுக்கு தர்ம சங்கடம் ஏற்படாதா? ஆணவமாக பேசுவதையும், முறை தவறி பேசுவதும் யார் கண்டிப்பது? பூனைக்கு யார் மணி கட்டுவது? அதனால் தான் நான் அவரை கோபத்தோடு பேசி என்னுடைய கன்னடத்தை பதிவு செய்தேன். மற்றபடி அவர் மீது எனக்கு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி எல்லாம் கிடையாது. ஒரு திரை கலைஞனாக மட்டுமே அவர் மீது விருப்பு வெறுப்பு இல்லாமல் அவர் பேசியதை கண்டிக்கிறேன். அவருடைய இயல்பை மாற்றிக் கொண்டால் ரொம்ப சந்தோஷம் என்று கூறியிருக்கிறார்.