விஜய் டிவியில் அவள் பேசிய வார்த்தை, உறவினர் விசேஷத்தில் நடந்தது என இது எல்லாம் தான் முதல் மனைவியை பிரிந்ததற்கு காரணம்- மனம் திறந்த நடிகர் பப்லு

0
953
Babloo
- Advertisement -

என்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்ததற்கு காரணம் இது தான் என்று மனம் திறந்து நடிகர் பப்லு அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் பிரித்திவிராஜ். இவரை பெரும்பாலும் பப்லு என்று தான் அழைப்பார்கள். தமிழ் சினிமா உலகில் ஜாம்பவானாக திகழ்ந்த எம் ஜி ஆர், சிவாஜி கணேசன் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பிரிதிவிராஜ். மேலும், இவர் சினிமா உலகிற்கு வந்து நாற்பது வருடங்களுக்கு மேல் ஆகி இருக்கிறது.

-விளம்பரம்-

அதோடு இவர் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் இதுவரை 200 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். பின் இவர் சின்னத்திரையில் மர்மதேசம், அரசி, வாணி ராணி போன்ற பல்வேறு தொடர்களில் நடித்து இருக்கிறார். இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று சமீபத்தில் முடிவடைந்த கண்ணான கண்ணே என்ற தொடரில் கதாநாயகிக்கு அப்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

பப்லு திரைப்பயணம்:

இப்படி இவர் என்ன தான் படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் ரியல் லைப்பில் உண்மையான ஹீரோ தான். இவருக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ள ஒரு மகன் உள்ளார். இவருடைய மகனின் பெயர் அகத். இப்படி ஒரு நிலையில் பப்லு சமீபத்தில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அந்த பெண் மலேசியாவை சேர்ந்தவர். அவருக்கு 23 வயது தான் ஆகிறது. ஆனால், பப்லுக்கு 55 வயது ஆகிறது. முதலில் இந்த பெண் பப்லுக்கு தொழிலில் உதவியாளராக இருந்தார்.

பப்லு இரண்டாவது திருமணம்:

பின் சில மாதங்களுக்கு முன்பு தான் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியானது. இதை தொடர்ந்து சமூக வலைதளத்தில் பலரும் விமர்சித்து வந்தனர். குறிப்பாக, இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் வயது வித்தியாசத்தை காட்டி பலரும் கலாய்த்து வருகின்றனர். அதோடு இவருடைய முதல் மனைவி, குழந்தை பாவம் என்றெல்லாம் கருத்து தெரிவித்து வருகின்றார்கள். இந்த நிலையில் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்ததற்கான காரணத்தை மனம் திறந்து பப்லு பேட்டியில் கூறி இருந்தது, நானும் என்னுடைய முதல் மனைவியும் நண்பர்களாகத்தான் இருந்தோம்.

-விளம்பரம்-

முதல் மனைவி குறித்து சொன்னது:

நண்பர்களாக இருக்கும் போது நன்றாக தான் இருந்தது. கணவன் மனைவியாக மாறிய பிறகு தான் எங்களுக்குள் பிரச்சனை தொடங்கியது. மேலும், விஜய் டிவியில் சில வருடங்களுக்கு முன்பு கல்யாணம் பந்தல் என்ற ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில் நானும் என்னுடைய மனைவியும் கலந்து கொண்டிருந்தோம். அப்போது தொகுப்பாளர் என்னுடைய மனைவியிடம், உங்களுடைய கணவரை ஹக் பண்ணுவதற்கு நீங்கள் சந்தோஷப்படுகிறீர்களா? என்று கேட்டதற்கு யார் இவனா? என்று கேட்டார். அது என்னை மிகவும் காயப்படுத்தி இருந்தது. அதுமட்டுமில்லாமல் எனக்கு ஸ்கூட்டிங் ஸ்பாட்டில் நான் கேட்டதும் ஜூஸ், கார் எல்லாம் தந்து எனக்கு மரியாதை தருகிறார்கள்.

விவாகரத்து குறித்து சொன்னது:

என்னுடைய முதல் மனைவியின் ரிலேஷன் பங்க்ஷன்க்கு போகணும் என்றால் கூட ஆட்டோவில் வாங்க கார் அனுப்ப முடியாது என்று கூறுவார். நான் ஏதாவது டிரஸ் போட்டு இது நல்லா இருக்கா என்று கேட்டால் கூட உனக்கு இது செட் ஆகவில்லை என்று ஒரே வாரத்தில் கிளம்பி போய்விடுவார். அது எனக்கு ஒரு மாதிரியாக இருக்கும். அதனால் எங்களுக்குள் அடிக்கடி சண்டை வரும். கோபத்தில் நானும் என்னுடைய முதல் மனைவியை அதிகமாக கெட்ட வார்த்தையில் பேசி திட்டுகிறேன். அதை பார்த்து என்னுடைய மகன் ரொம்பவே அப்செட் ஆகிவிடுவான். அதனால் தான் நான் வீட்டில் இருந்து கிளம்பி வாடகைக்கு வீடு எடுத்து இருந்தேன். எனக்கு மரியாதை கொஞ்சம் கூட இல்லாததால் தான் இப்படி ஒரு முடிவுக்கு எடுக்க காரணம் என்று கூறியிருந்தார்.

Advertisement