அமராவதி படத்தில் நடித்த நடிகரின் மகன், இப்போ அஜித்தின் வலிமை படத்தில் நடித்துகிறார்.

0
1678
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித். கடந்த ஆண்டு அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை’ ஆகிய இரண்டு படமுமே மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் மீண்டும் இணைந்து தல அஜித்தை வைத்து “வலிமை” படத்தை உருவாக்கி வருகிறார்கள். இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக உள்ளார். அதோடு நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அதே குழுவினரே அஜித்தின் வலிமைப் படத்திலும் பணியாற்றுகிறார்கள்

-விளம்பரம்-

தற்போது வரை வலிமை படத்தின் கதாநாயகி குறித்து எந்த தகவலும் வரவில்லை. மிகவும் ரகசியமாக ஷூட்டிங்கை நடத்தி வருகின்றார் இயக்குனர். சமீப காலமாகவே தல அஜித் அவர்கள் படங்களில் பெப்பர் சால்ட் லுக்கில் இருந்த நிலையில் இந்த வலிமை படத்தில் பிளாக் ஹேர் ஸ்டைலில் அதுவும் இளமை தோற்றத்துடன் நடிக்கிறார். இந்த படத்தில் தல அஜித் அவர்கள் போலீசாக நடிக்கிறார். ஹீரோயினியும் போலீஸ் கேரக்டர் தான் என்றும் சொல்லப்படுகிறது. அதுமட்டு இல்லாமல் இந்த படத்தில் தல இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும் பேசப்படுகிறது.

- Advertisement -

இப்படி படத்தைப் பற்றிய பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி அடிபட்டுக் கொண்டிருக்கிறது இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகர் பானு பிரகாஷ் மகன் ராஜ் ஐயப்பா வலிமை படத்தில் அஜித்தின் தம்பியாக ராஜு ஐயப்பா நடிக்கப்போகிறார் என்ற தகவல்களும் பல்வேறு இணைய தளங்களில் வலம் வந்துகொண்டிருக்கிறது. ராஜ் ஐயப்பா வேறு யாரும் கிடையாது இவரது தந்தை பானு பிரகாஷ், அஜித் நடிப்பில் வெளியான அமராவதி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவரும் அஜித்தும் நெருங்கிய நண்பர்கள் அதேபோல ஐயப்பா அஜித்தின் தீவிர ரசிகரும் கூட.

THALA AJITH on Twitter: "Brother? #Valimai… "

மேலும் இவர் அதர்வா நடிப்பில் வெளியான 100 என்ற படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்ட.து அதேபோல ராஜு ஐயப்பா நடிகராக திகழ யோசனை கொடுத்ததும் அஜித்தான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பானு பிரகாஷ் அளித்த பேட்டி ஒன்றில் பேசியபோது அஜித்திடம் நான் ஒருமுறை போனில் உரையாடிக் கொண்டிருந்தேன். அப்போது என் மகன் குறித்து சொன்ன போது அவருடைய புகைப்படத்தை அனுப்பச் சொன்னார். அவரது புகைப்படத்தை பார்த்துவிட்டு பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறான் அவனை சினிமாவில் நடிக்க வையுங்கள் என்று கூறியதாகவும் அஜித்தின் அறிவுறுத்தலின் பெயரிலேயே அவரை சினிமாவில் நடிக்க வைத்ததாகவும் பானு பிரகாஷ் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement