‘நான் அடிக்கடி ஜெயிலுக்கு சென்று வருவேன்’ நடிகர் சார்லி அளித்த பேட்டி – இது தான் பின்னணி

0
593
Charlie
- Advertisement -

நான் அடிக்கடி ஜெயிலுக்கு சென்று வருகிறேன் என்று நடிகர் சார்லி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் வேல்முருகன் தங்கச்சாமி மனோகர் என்கிற சார்லி. இவர் தூத்துக்குடியை சேர்ந்தவர். தமிழ் சினிமா உலகில் காமெடியனாக அறிமுகம் ஆகி இன்று குணச்சித்திர நடிகராக பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார் சார்லி.

-விளம்பரம்-

இவர் திரைப்பட நடிகர் மற்றும் இல்லாமல் நகைச்சுவை நடிகரும் ஆவார். இவர் இதுவரை 800க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் பெரும்பாலான தமிழ் முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் சினிமாவில் 4 தலைமுறை நடிகர்களுடன் சேர்ந்து நடித்து கொடிகட்டிப் பறந்தவர். இப்படிப்பட்ட இவரை தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்தி வைத்தது இயக்குனர் பாலசந்தர் தான்.

- Advertisement -

நடிகர் சார்லி திரைப்பயணம்:

1983 ஆம் ஆண்டு பாலசந்தர் இயக்கத்தில் வெளியான பொய்க்கால் குதிரை என்ற படத்தின் மூலம் தான் நடிகர் சார்லி தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார். அன்றிலிருந்து இன்று வரை இவர் ஓயாமல் நடித்துக் கொண்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் நிறைய பொது சேவைகளும் செய்து கொண்டு இருக்கின்றார். அதிலும் இவர் சுமார் 12 வருடமாக மரம் நடுகிறார். இதற்காக பலரும் இவரை பாராட்டி இருந்தார்கள்.

நடிகர் சார்லி அளித்த பேட்டி:

இந்நிலையில் நடிகர் சார்லி அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் கூறி இருப்பது, நான் 12 வருடமாக மரம் நடுதல் வேலை செய்து கொண்டிருக்கிறேன். நடிகரும், என்னுடைய நண்பருமான விவேக் மரம் நடுவதற்கே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். என் நண்பர் விவேக் இல்லை என்றாலும் அவருடைய மரங்கள் இன்றும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அவருடைய பெயரை உச்சரித்துக் கொண்டு தான் இருக்கின்றது.

-விளம்பரம்-

சார்லி சிறைக்கு செல்ல காரணம்:

அதேபோல் நான் சிறைக்கு அடிக்கடி சென்று வருகிறேன். அதாவது சிறுவர் சீர்திருத்தப்பள்ளி. ஜெயிலுக்கு சென்று சிறுவர்களிடம் நிறைய பேசுவேன். அப்படி நான் பேசிவிட்டு வருவதனால் அவர்களிடம் நிறைய மாற்றங்கள் வருவதாக கூறுகிறார்கள். அவர்களுக்கு தப்பு செய்த பிறகு தான் நாம் செய்த தவறு தப்போ என்ற உணர்வு ஏற்படுகிறது. எப்போது ஒருவன் செய்த தவறை உணர்கிறானோ அவன் இரண்டாவது முறை தவறு செய்யமாட்டேன்.

நற்பணி சினிமா நடிகன் செய்ய காரணம்:

அந்த பணியை நான் பல ஆண்டுகளாக செய்து கொண்டிருக்கின்றேன். இப்படி சினிமா நடிகர் செய்வதற்கும், மற்றவர்கள் செய்வதற்கும் என்ன வித்தியாசம் என்றால்? சினிமா நடிகன் ஒரு குப்பை ஒன்று எடுத்தால் போதும் பின்னாடியே மற்றவர்களும் எடுப்பார்கள் என்று பல விஷயங்களை கூறி இருக்கிறார் நடிகர் சார்லி. இப்படி இவர் பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

Advertisement