ஜாலியாக கிரிக்கெட் விளையாடும் போதே மயங்கி விழுந்து இறந்த பாலிவுட் நடிகர்- அதிர்ச்சியில் திரையுலகம்

0
521
- Advertisement -

கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த பிரபல நடிகர் திடீரென மயங்கி விழுந்து இறந்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் தீபேஷ் பன். இவர் இந்தி திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருக்கிறார். இவருடைய நகைச்சுவை எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

இந்தியில் மிகவும் பிரபலமான காமெடி கா கிங் கான், பூட்வாலா, காமெடி கிளப், எப்ஐஆர், சன் யார் சில் மார் மற்றும் சேம்ப் உள்ளிட்ட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நகைச்சுவை நடிகராக தீபேஷ் பன் நடித்து இருக்கிறார். அதிலும் இவரை மக்கள் மத்தியில் படு பேமஸ் ஆக்கியது பாபிஜி கர் பர் ஹெயின் என்ற தொடர் தான். இதில் தீபேஷ் அவர்கள் மால்கன் என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.

- Advertisement -

நடிகர் தீபேஷ் பன்:

தற்போது இவர் மும்பையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை தனது குடியிருப்பு அமைந்துள்ளதாக தாஹிர் பகுதியில் தீபேஷ் பன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி சுருண்டு விழுந்துள்ளார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தார்கள்.

தீபேஷ் பன் மரணம்:

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும், தீபேஷ் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். தற்போது தீபேஷ்க்கு 41 வயது தான் ஆகிறது. மறைந்த நடிகர் தீபேஷுக்கு மனைவி மற்றும் ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது.

-விளம்பரம்-

தீபேஷ் பன் இறப்புக்கு காரணம்:

இவர் கிரிக்கெட் விளையாட வருவதற்கு முன்பு ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்ததாக கூறப்படுகிறது. அதற்குப் பின் தான் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 41 வயதில் நடிகர் தீபேஷ் திடீர் மாரடைப்பால் இறந்து உள்ள செய்தி திரை உலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தீபேஷ் இறப்பிற்கு சின்னத்திரை மற்றும் திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இரங்கலை தெரிவிக்கும் பிரபலங்கள்:

மேலும், மறைந்த தீபேஷ் பன் நண்பரும், சக நடிகருமான சார்ருல் மாலிகின் பதிவில், தீபேஷ் பன்னை எட்டு வருடங்களான எனக்குத் தெரியும். அவர் ஒரு நல்ல நடிகர் மட்டும் அல்ல, நல்ல மனிதர். அவரை இழந்துவிட்டோம் என வேதனையுடன் பதிவிட்டு இருக்கிறார். இப்படி பல பிரபலங்கள் தங்கள் இரங்கலை வேதனையுடன் கூறி வருகின்றனர்.

Advertisement