அதிகாலையில் சைக்கிளிங் சென்ற கௌதம் கார்த்திககிற்கு நடந்த சோகம். இப்படி கூடவா நடக்குது சென்னைல ?

0
1186
goutham
- Advertisement -

பிரபலங்கள் பலரும் இந்த லாக்டவுன் நேரத்தில் உடற் பயிற்சி செய்வது, சுற்றுலா செல்வது என்று இருந்து வருகின்றனர். அதே போல ஒரு சில பிரபாலங்கள் இந்த லாக்டவுன் சமயத்தில் சைக்கிளிங் பயணத்தை மேற்கொண்டு பொழுதை கழித்தனர். நகுல், ஆர்யா என்று பல நடிகர்கள் சைக்கிளிங் சென்ற புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டும் இருந்தனர். அந்த வகையில் பிரபல நடிகர் கௌதம் கார்த்திக்கும் சைக்கிளிங் சென்றுள்ளார். ஆனால், அவர் சைக்கிளிங் சென்ற இடத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

-விளம்பரம்-

இன்று காலை 5 10 மணி அளவில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டிடிகே சாலையில் நடிகர் கௌதம் கார்த்திக் தனது சைக்கிளில் சென்று கொண்டு இருந்திருக்கிறார். அப்போது அவரை பின்தொடர்ந்து பின்னாலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் கௌதம் கார்த்திக் இடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டு பைக்கில் வேகமாக சென்று கொண்டு இருக்கிறார்கள். இந்த சம்பவத்தை அடுத்து காலை 5.30 மணி அளவில் சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் புகார் அளித்திருக்கிறார்.

- Advertisement -

கௌதம் கார்த்திக் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் இந்த சம்பவம் குறித்து கூறியுள்ள சென்னை சைக்கிளிங் குரூப்பின், ஒருங்கிணைப்பாளர் அகிலேஷ் என்பவர் கூறுகையில் டிடிகே சாலையில் சைக்கிள் பயணம் செல்லும்பவர்களிடமிருந்து இதுபோன்ற பொருட்கள் திருடப்படுவது மாதத்திற்கு இரண்டு மூன்று முறையாவது நடந்துவிடுகிறது. இதற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது .இதுபோன்ற புகார்கள் நகரில் உள்ள மற்ற பகுதிகளில் வருவது கிடையாது என்று கூறியிருக்கிறார்.

Image

நடிகர் கௌதம் கார்த்திக் இறுதியாக ‘தேவராட்டம்’ படத்தில் நடித்து இருந்தார். இதையடுத்து சிம்புவுடன் இணைந்து ஒரு படத்தில் கமிட் ஆனார் கௌதம் கார்த்திக். ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இந்த படம் உருவாக இருக்கிறது. ‘மஃப்டி’ என்னும் கன்னட படத்தின் தமிழ் ரீமேக் இது. கன்னடத்தில் ஸ்ரீமுரளி நடித்த கதாபாத்திரத்தில் கௌதம் கார்த்திக்கும், சிவராஜ்குமார் நடித்த கதாபாத்திரத்தில் சிம்புவும் நடிக்கிறார்.ஆக்‌ஷன் கலந்த திகில் படமாக இது தயாராகிறது. படத்தில் சிம்புவை இதுவரை நடிக்காத வித்தியாசமான வேடத்தில் பார்க்கலாம்.

-விளம்பரம்-
Advertisement