அடையாளம் தெரியாமல் மாறிய ஹாலிவுட் நடிகர் ஜெட்லீ..? நோயால் இப்படி மாறிட்டாரே..?

0
1720

ஹாலிவுட் படங்களை இன்று நாம் பார்ப்பதற்கு முக்கிய காரணமே, புருஸ் லீ, ஜாக்கி சான் மற்றும் ஜெட் லீ போன்ற நடிகர்களால் தான். இந்த மூன்று பெயரில் நடிகர் ஜெட் லீ தனக்கென்று ஒரு பாதையை அமைத்து திரை துறையில் வெற்றிகரமாக திகழ்ந்து வந்தார்.சீனாவில் பிறந்த ஜெட் லீ ,ஒரு சிறந்த சீன தற்காப்புக்கலை வீரராவர். மேலும்”வா சூ” என்ற தற்காப்பு கலையை முறையாக கற்றவர். 1982 இல் வெளிவந்த “சாவ்லின் டெம்பல்’ என்ற படத்தில் சினிமாவில் அறிமுகமானார். இவரது பல படங்கள் அமெரிக்கா உட்பட உலகெங்கும் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்றுள்ளன.

- Advertisement -

இதுவரை பல்வேறு படங்களில் நடித்த ஜெட் லீக்கு தற்போது 55 வயதாகிறது. படங்களில் நாம் துருத்துறுவென பார்த்த ஜெட் லீயை தற்போது நீங்கள் பார்த்தால் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாவீர்கள். கடந்த 10 ஆண்டுகளாக ஹைப்பர் தைரொய்ட் என்ப்படும் நோயால் பாதிக்கப்பட்ட ஜெட்லீ தற்போது மிகவும் உடல் நலம் குன்றி காணப்படுகிறார்.

சமீபத்தில் அவரது ரசிகர் ஒருவர் நடிகர் ஜெட் லீயுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ஜெட் லீயை பார்த்த ரசிகர்கள் , இவரா இப்படி மாறிவிட்டார் என்று ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்

-விளம்பரம்-
Advertisement