துணிவு படத்துக்கு மோசமான புக்கிங்கா ? அஜித்துக்கு எதிராக செயல்படும் நபர்கள். உண்மையை உடைத்த நிறுவனம்.

0
469
- Advertisement -

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு படம் வெளியாக இனனும் 9 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் படம் வெளியாவதை பற்றி போலியான கருத்துக்கள் சோசியல் மீடியாவில் பரவி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் துணிவு நடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, பவானி போன்றவர்கள் இப்படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் “சில்லா சில்லா” பாடலும் “காசேதான் கடவுளடா” என்ற இரண்டு பாடல்களும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது.

-விளம்பரம்-

தற்போது படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து வரும் பொங்களன்று திரையில் வெளியாக உள்ளது. மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் நடித்த “வாரிசு” படமும், அஜித் நடித்த துணிவு படமும் ஒன்றாக வெளியாக இருப்பதினால் ரசிகர்கள் மத்தியில் இன்னமும் துணிவு படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த நிலையில் தற்போது துணிவு படத்தில் டிக் டாக் மற்றும் யூடியூப் பிரபலமான ஜி.பி.முத்து நடித்துள்ளார் என்ற தகவல சமூக வலைதளங்கில் வெளியாகி வைரலாகி வருகிறது.

- Advertisement -

ஆகாயத்தில் துணிவு போஸ்டர் :

மேலும் சார்பட்ட, நட்பே துணை, பண்ணி குட்டி போன்ற படங்களில் நடித்திருந்த தங்கதுரையும் நடித்திருப்பதாக தகவல்வெளியாகின. தற்போது துணிவு படக்குழு, படத்தின் ப்ரோமோஷனுக்காக வேற லெவல் படக்குழு ஒரு திட்டம் தீட்டி வானத்தில் இருந்து குதித்து சாகசம் செய்யும் ஸ்கை டைவிங் குழுவினர் துபாயில் விமானத்தில் இருந்து குதித்து அந்தரத்தில் பறந்தபடி துணிவு பட போஸ்டரை பறக்கவிட்டனர்.

ட்ரைலர் :

அதோடு துணிவு படக்குழு தங்கள் படத்தின் ட்ரைலரை கடந்த 1ஆம் தேதி வெளியாகி அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஆனாலும் இப்படத்தின் ட்ரைலர் நடிகர் விஜய் முன்னதாக நடித்திருந்த பீஸ்ட் படத்தை போல இருக்கிறது என்றும். படத்தில் சில காட்சிகளில் அஜித்திற்கு பதிலாக வேறொருவர் நடித்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டுகளும் எழுதின. இந்த நிலையில் அஜித்தின் துணிவு படத்தை ஃபிரான்ஸ் நாட்டில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும், மோசமான நிலையில் திரையரங்குகள் முன்பதிவு செய்யப்படிருப்பதாகவும் சில தகவல்கள் வெளியாகின.

-விளம்பரம்-

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி :

இப்படிபட்ட நிலையில் ஃபிரான்ஸ் NIGHT ED FILMS தயாரிப்பாளர் துணிவு போஸ்டரை பதிவிட்டு தன்னுடைய உண்மையான ட்விட்டர் கணக்கு இதுதான். இப்போதிலிருந்து இந்த கணக்கில் இருந்து வருவதுதான் உண்மையானவை என்றும், தேவையில்லாமல் சிலர் ஃபிரான்ஸில் துணிவு படம் வெளியாவது குறித்து தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். அதனை யாரும் நம்ப வேண்டாம் என்று அந்த ட்விட்டர் பதிவின் மூலம் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Advertisement