பிரபுவும் குஷ்பூவும் கல்யாணமே பண்ணிட்டாங்க,ஆனா – பிரபலம் கிளப்பிய புதிய சர்ச்சை.

0
358
- Advertisement -

குஷ்பூ- பிரபுக்கும் திருமணமே ஆகிவிட்டது என்று பிரபலம் ஒருவர் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக குஷ்புவும், பிரபுவும் திகழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். அதோடு குஷ்பு, பிரபு என்று சொன்னாலே அனைவருக்கும் ஞாபகம் பிரபு சின்னத்தம்பி படம் தான். இந்த படத்தின் மூலமாக தான் இவர்கள் மக்கள் மத்தியில் பிரபலமானார்கள்.

-விளம்பரம்-

மேலும், 90 கால கட்டங்களில் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்தவர் குஷ்பு. இவர் முதன் முதலாக 1980களில் தான் தன்னுடைய முதன் பயணத்தை தொடங்கினார். பின் குஷ்பூ அவர்கள் தமிழ் ,தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி திரைப் படங்களில் நடித்து இருக்கிறார். அதிலும், இவர் தமிழ் சினிமா உலகில் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்க்குமார், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

குஷ்பூ திரைப்பயணம்:

இவர் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். குஷ்புவின் மீது உள்ள அன்பினால் அந்த காலகட்டத்திலேயே அவருக்கு கோவில் கட்டினார்கள் அவரின் ரசிகர்கள். பின் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் குஷ்பூ படங்களில் குணச்சித்திர வேடங்களிலும்,சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். தற்போது குஷ்பூ படங்களில் கவனம் செலுத்தி வந்தாலும் அரசியலிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். முதலில் திமுக-வில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கி இருந்தார் குஷ்பூ.

குஷ்பூ அரசியல்:

குஷ்பூ பாஜக-வில் இருக்கிறார். மேலும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்த குஷ்பூ சமீபத்தில் தான் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பொறுப்பேற்று இருக்கிறார். தற்போது இவர் அரசியல், சினிமாவிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் குஷ்பூவுக்கும் பிரபுவுக்கும் திருமணம் நடந்து விட்டது என்ற சர்ச்சை செய்தி தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது youtube சேனலில் சினிமா, வரலாறு குறித்து டாக்டர் காந்தராஜ் பேட்டி அளித்து வருகிறார்.

-விளம்பரம்-

கோவில் கட்ட காரணம் :

அந்த வகையில் இவர் சமீபத்தில் பேட்டியில் குஷ்பூ- பிரபு குறித்து கூறியிருந்தது, குஷ்புவுக்கு கோயில் கட்டும் அளவிற்கு நம் ஊரில் ரசிகர்கள் வெறிபிடித்து இருந்தார்கள். அப்போது பிரபு -குஷ்பூ காதல் விவகாரம் தலைப்பு செய்தியாகவே வந்தது. அப்போது ஒரு பத்திரிகை இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்று போடாமல் குஷ்பூவும் பிரபுவும் திருமணம் செய்து விட்டார்கள் என்று போட்டுவிட்டார்கள். இது மிகப்பெரிய சர்ச்சையாகவே இருந்தது. அது மட்டும் இல்லாமல் குஷ்பு- பிரபு ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் எல்லாம் செய்திகளில் வைரலாகி இருந்தது.

அந்த நேரத்தில் பிரபுவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகளும் இருந்தது. இவர்கள் திருமணம் செய்து கொண்டதால் பிரபுவின் முதல் மனைவியின் குடும்பத்தினர் பயங்கரமாக எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். அதற்கு பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனஸ்தாபத்தால் இவர்களுடைய காதல் முறிந்தது என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், குஷ்பு- பிரபு திருமணம் செய்து விட்டதாக வந்த செய்தி கூட அவர்கள் சொல்லி தான் பத்திரிகையில் போட்டதாக எல்லாம் விளக்கம் கொடுத்திருந்தார்கள்

Advertisement