அசல் கோளரின் ஜோர்தாள பாடலை விமர்சித்து ஜேம்ஸ் வசந்தன் போட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது நான்கு வாரங்களை கடந்து இருக்கிறது முதல் நாளே 20 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் வயிற்றுக்காடு போட்டியாளராக மைனா நந்தினி கலந்து கொண்டார். இதில் கடந்த வாரம் அசல் கோளாறு வெளியேற்றப்பட்ரார். மேலும், இந்த நிகழ்ச்சியில் பரிச்சியமில்லாத நபராக கலந்து கொண்டு இருந்தவர் அசல் கோளாறு என்னும் வசந்த்.
வசந்த குமார் என்ற தனது பெயரை அசல் கொலார் என மாற்றிவைத்து இருக்கிறார். இவர் ‘ஜோர்த்தாலே’ என்ற பாடல் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து சந்தோஷ் நாராயணன், யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் இசையிலும் பாடல்களை அசல் எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், இன்றும் இவர் அடையாளமாக இருப்பது ‘ஜோர்த்தாலே’ பாடல் தான்.
இந்த பாடல் வெளியான போது பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகி யூடுயூப், இன்ஸ்டாகிராம் என்று அணைத்து சமூக வலைத்தளத்திலும் வைரலானது. இப்படி ஒரு நிலையில் இந்த பாடலை தான் தற்போது தான் கேட்டதாகவும் அதில் தனக்கு சில முறைப்பாடுகள் இருப்பதாகவும் ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் : –
நேற்று ஒரு இளைஞன் என்னிடம் “சார், இந்த ஜோர்தல இருக்குல்ல..?” என்று பேசிக்கொண்டே போனான்.
அவனை நிறுத்தி “குறுக்கே எதோ சொன்னியே.. அது என்னா?” என்று கேட்டேன்.
“சார், ஜோர்தல தெரியாதா? எப்படி சார் ஒங்களுக்குத் தெரியாம போச்சி” ன்னு கேட்டான்.
அவன் அதைப்பற்றி படபடவென ஏராளமானத் தகவல்களை அள்ளித் தெளித்துக்கொண்டே போனான். 33 மில்லியன் பார்வையாளர்கள் என்று அவன் சொன்னபோது என் ஆவல் எல்லைமீறிப் போக, உடனே போய் YouTube-ல் பார்த்தேன்.
ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு கலாச்சாரம் உண்டு, சில தேர்வுகள் உண்டு, நமக்கு அது ஒவ்வாமல் போவது இயல்புதான் என்றெல்லாம் தெரிந்தாலும் அதையெல்லாம் தாண்டி ஒரு அருவருப்பும், விரக்தியும் ஏற்பட்டதைத் தடுக்க முடியவில்லை – பல காரணங்களால்!
குப்பத்திலும், சேரியிலும் வாழும் இளைஞர் ஏதோ ஒரு வழியில் தங்கள் அடையாளத்தை நிலைநிறுத்தி உறுதியுடன் முன்னுக்கு வரவேண்டும் என்று அதிக விரும்புபவன் நான். அந்த ஒரே காரணத்துக்காக என்னை தேற்றிக்கொண்டு அந்த இளைஞனை மனதுக்குள் வாழ்த்தினேன்.
அந்தக் காணொலியில் என்னை மிகவும் துக்கப்படுத்தின விஷயம் – எல்லாவற்றையும் துணிவுடன் நம்பிக்கையுடன் செய்த அந்த கருப்பு இளைஞர் பட்டாளம் நான்கு வெள்ளையானப் பெண்களை நாடிச்சென்றதை மட்டும் ஏற்கமுடியவில்லை.
அந்தக் காணொலியின் வெற்றி உன் எழுத்து, பாட்டுத் திறமையா? அல்லது அந்த வெள்ளை நிற இளம் பெண்களின் குறந்த உடையும், வெட்டும் இடையுமா?
உன்னால் பதில் சொல்ல முடியாது தம்பி.
நீ வென்றும் தோற்றாய்